சமஸ்கிருத சனியன் - தந்தை பெரியார் - Periyar Tamil Books PDF


சமஸ்கிருத சனியன்

தந்தை பெரியாரின் கட்டுரைகள் தொகுப்பு

இதுதான் சமஸ்கிருதம் ! -தந்தை பெரியார் ("புரட்டு இமாலயப் புரட்டு! நூலிலிருந்து..)

மஸ்கிருதம் ஒரு மூல மொழியல்ல அது அத்திய பல நாட்டுக் கதம்ப மொழி. அடிநாவில் (நீண்டநாளுக்கு முன்) மேற்கு மத்திய ஆசியாவில் வாழ்ந்த நார்டிக் ஆரிய மக்கள் பேசிவந்த மொழியே, பலமொழிகள் கலந்து சமஸ்கிருதம் என்பதாக ஆயிற்று. அதாவது. தங்கள் தாயகத்தின் சுற்று வட்டார எல்லை நாடுகளின் மொழிகளான டர்கிஸ் (Turkish) மொழி, ஈரானிய மொழி பாக்ட்சினியாவில் குடியேறிய பின் பாமீரியன் மொழி ஆகியவற்றிலிருந்து தொகுத்த சுதம்பமே சமஸ்கிருத மொழி.

மேற்கு மத்திய ஆசியாவில் வசித்த இந்த ஆரியர்கள் பாக்ட்ரினியாவிலிருந்து இரு பிரிவாகப் பிரிந்து, கி.மு. 1350ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கிந்தியாவில் குடியேறிய போது இந்த சமஸ்கிருத மொழியையும் வடமேற்கிந்தியாவில் புகுத்தினர்.

இவர்கள் வடமேற்கிந்தியாவில் இரு முறை நுழைந்தனர். முதலாவது கி.மு. 1400 வேதகாலம்; இரண்டாவது கி.மு. 58இல் பாக்ட்ரினியா, சாக்டியானா நாடுகளில் கிரேக்க பாரசீக மொழிக் கலைத் தொடர்புகளின் பலனாக இந்த சமஸ்கிருந மொழி மேற்கண்ட பாரசீக கிரேக்க மொழிக்கலை இலக்கிய இலக்கணங் களையும் தழுவி மேற்கொண்டு திருத்தப் பெற்றது.

மற்றும், சமஸ்கிருத மொழி இந்தி யாவின்...லந்தீன்... மொழி என்றும் அழைக் கப்பட்டது. ஆல்பன்செல்ட் மக்கள் மத்திய தரைக்கடல் வட்டாரங்கள் மீது படையெடுத்த போது, இத்தாலிய மக்களிடையே இந்த கெல்ட் மக்கள் திணித்த மொழியே லத்தீன்

மொழிகளின் பிரிவு

மொழிகள், துரானிய மொழிகள் என்றும், ஆரிய மொழிகளென்றும் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளன. சமஸ்கிருதம் ஆரிய மொழியினத்தைச் சேர்ந்தது.

சமஸ்கிருதம் என்ற சொல்லின் பொருள், சுத்தப்படுத்தப்பட்டது அல்லது பலவற்றைச் சேர்த்து உருவகப்படுத்தப் பட்டது என்பதாகும்

மேலும் விளக்க வேண்டுமானால், இது தஹிந்துஸ்தானியில் சான்ஸ்கிரிட் என்று உச்சரிக்கப்படுகிறது. இந்த சமஸ்கிருத மொழியாக்கத்தின் பெரும் பகுதியும். அடிப்படை அமைப்பும் மேற்கு மத்திய ஆசியாவில் வழங்கிய ஆரிய மொழி லிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டதாகும். மற்றும், பல நூற்றாண்டுகளாக பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளுடன் தொடர்பு கொண்டதன் பலனாகப் பிறமொழி அம்சங்கள் பலவற்றை இந்த சமஸ்கிருத மொழியுடன் அவ்வப்போது சேர்த்துக் கொண்டு வந்தனர்.

பொருளுக்கேற்ற பெயர்

வடமேற்கு இந்தியாவில் குடியேறும் வரையில் இந்த ஆரியர்கள், இடைக் காலத்தில் திரிந்த பல்வேறு நாடுகளின் பல்வேறு மொழிக் கலைப்பகுதிகளையும் இச்சமஸ்கிருதத்தில் சேர்த்துக் கொண்டனர்.

 

சமஸ்த = எல்லாம்;

கிருதி = தொகுக்கப்பட்டது

என்பதே இதன் பொருள்.

 

என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா என்ற ஆங்கில மொழிப் பேரகராதியின் 13ஆவது தொகுதியில், சமஸ்கிருத மொழி பிறப்பு வரலாறு. டாக்டர் எ.ஜுலியஸ் எக்லிங் என்பவரால் தரப்பட்டுள்ளது.

சமஸ்கிருத மொழி ஆரிய மொழி களுடன் கொண்டுள்ள தொடர்பையும், பல அம்சங்களில் கிரேக்க மொழியைப் போன்றிருப்பதையும் இவர் விளக்கி யுள்ளார்.

 

டாக்டர் பிரான்ஸ் யாப் என்பவர், கோதிக் மொழியிலிருந்து பைபிளை யாசித்தபோது கோதிக் மொழியும் சமஸ்கிருத மொழி போன்றே இருப்பதைக் கண்டார். சர். மானியர் வில்லியம் என்பவர் தமது சமஸ்கிருந் ஆங்கில அகராதியின் (அச்சிட்டது: காலண்டர் பிரஸ் ஆக்ஸ்போர்டு 1899) முகவுரையில், சமஸ்கிருந் மொழி பாக்ட்ரியானா சாக்டியானா வட்டாரங்களில் தோன்றியது; புக்காவிலோ, ஆக்ஸ்நதி துவக்க வட்டாரத்திலோ தோன்றியதல்ல என்று கருத்து வெளி வீட்டிருக்கிறார்.

 

இந்தியாவினுள் நுழைத்த இந்த ஆரியர்கள் கோத்ஸ் (கிநாய்) என்ற நாட்டிலிருந்து வந்தவர்களென்பதும் கோதிக் மொழியைத் தம்முடன் கொண்டு வந்தவர்களென்பதும் பல சரித்திரச் சான்றுகளால் தெளிவுபடுகிறது.

பிறந்த விதம்

இந்த கோதிக் மொழியே இடையில் பல்வேறு மாற்றங்கள் பெற்று சமஸ்கிருந் மொழியாக உருவெடுத்தது. ஆரியர்கள் மேற்கிந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, இந்தக் கலப்பட சமஸ்கிருத மொழியையும் அங்கிருந்த மக்கள் (ஹிந்து) பால் திரித்தனர். வேதகால சமஸ்கிருதத்திற்கும் இக்கால சமஸ்கிருந்த் திற்கும் அதிக வேற்றுமைகள் உள்ளன.

பொய்க் கூற்று

 

எனவே, இந்த சமஸ்கிருத மொழி அனாதிகால மொழியென்றும். இம்மொழி யிலிருந்துதான். இந்தியாவின் பழங்கால மொழிகள் அனைத்தும் உற்பத்தியாயிற் றெனவும் சொல்வது ஆதாரமற்றதாகிறது. ஏனெனில், இந்த மொழி கி.மு. 1500லும் அதற்குப் பின்னரும்தான் உருவாயிற் றென்பது தெளிவாகிறது. இந்தியர்கள் மீது திணிக்கப்பட்ட மொழிகளில் இதுவே கடைசி மொழி. உண்மை இப்படியிருந்தும், தற்கால மொழிகளில் சிலவற்றை இந்த சமஸ்கிருத மொழியிலிருந்து பிறந்ததாக சிலர் கூறிக் கொள்கின்றனர்.

இந்த நார்டில் ஆரியர்களும், ஈரானிய ஆரியர்களும் பல்வேறாகப் பிரிந்து, பல்வேறு திக்குகளில் படர்ந்தனர். இவ் விரு பிரிவினரும் இந்தியாவில் வசித்த இந்தோனேஷியர் சந்ததிகளே என்றும், இவர்களே வடகிழக்கு நாடுகளில் பரவினர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

 

ஹிந்துஸ்தானி

 

இவ்விதம் சென்றவர்களில் இரானிய ஆரியர்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பினர். இது வேத சமஸ்கிருத மொழி இந்தியாவில் நுழைக்கப்படுவதற்குப் பய நூற்றாண்டுகளுக்கு முன் நடந்தது. இந்தியா திரும்பிய இந்த ஈரானியர்கள் தாம். இப்போது மேற்கிந்தியாவில் பேசப்படும் ஹிந்தி (பிராக்கிருG) (ஹிந்துஸ்தானி) மொழியைக் கொண்டு வந்தவர்கள். இவர்கள் வந்ததும், அவ் வட்டாரங்களில் வசித்து வந்த பழங் குடிகளான தக்காணத்துக்கும் கிழக்கில் இந்தோனேஷியர்களைத் தெற்கில், வங்காள குடாக்கடல் வட்டாரத்திற்கும் அதற்கப்பாலும் செல்லச் செய்தனர். இவ்வாறாக நெருக்கித் தள்ளப்பட்ட இந்திய இந்தோனேஷியர்கள் பசிபிக் தீவுகள் வரையிலுள்ள வட்டாரங்களில் குடியேறினர்.

 

நார்டிக் இனத்தவரும் இந்தியா திரும்பியபோது தங்கள் மொழியையும் கொண்டு வந்தனர். ஆயினும் ஈரானிய, பாமீரிய, பாரசீக, கிரேக்க மொழிப் பண்புகள் இம்மொழியில் கலந்திருந்தன. இந்தக் கலப்பு மொழிதான் பின்னர் சமஸ்கிருதமெனப்பட்டது.

 

இந்த சமஸ்கிருத மொழி, பரம்பரை அனாதிகால மொழியென்றும் (தெய்வ மொழி என்பர் தென்னாட்டுப் பார்ப்பனர்) இலக்கிய வளமிக்கதென்றும் கூறி. அப்போதிருந்து வந்த ஹித்தி (ஹிந்துஸ் தானி) மொழிகளின் மீது திணிக்கப் பட்டது. இந்தியாவிலிருந்து பழம்பெரும் மொழிகளான இந்தோனேஷிய மொழி யிலிருந்து அடிநாளில் பிறந்த ஹிந்தி (ஹிந்துஸ்தானியும், நார்டிக் மொழிகளும் பல்வேறு வட்டாரங்களில் நெடுகப் பேசப்பட்டு பாக்ட்ரியானாவில் சமஸ் கிருதமாக உருமாற்றமும் பெயரும் பெற்றது. மொழி வரலாறுகளில் அறியக் கிடக்கிறது. இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட இந்த சமஸ்கிருதமும், ஹிந்தி (ஹிந்துஸ்தானியும் அப்போதிருந்த பற்பல இந்திய மொழிகளில் ஊடுருவி முக்கியமாக வடஇந்தியாவில் வழங்கிய மொழிகளை ஆக்கிரமித்துத் தலைமையிடம் கொண்டன.

 

சமஸ்கிருத மொழிக்கும், நார்டிக் மொழிகளுக்கும் முக்கியமாக கோதிக் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு காணப் படுகிறது. ஏனெனில், இந்த சமஸ்கிருத மும் நார்டிக் மொழிகளில் ஒன்றேயாகும் என்று டாக்டர் பாப் கட்டிக் காட்டுகிறார்.

 

மற்ற மொழிகளைவிட இந்த சமஸ் கிருத மொழிதான் அதிகமாக அயல் மொழிகளின் கலப்பைக் கொண்டு பெரும் உருமாற்றம் பெற்றிருக்கிறது. இருந்தாலும் இதுவும் நார்டிக் மொழிக் குழுவைச் சேர்ந்ததேயாகும்.

 

இன மனித உட்பிரிவுகள்

 

தென்கிழக்கு ஆசிய மக்களின் இனப் பிரிவைத் திட்டவட்டமாகக் கணித்துக் காண்பது கடினமாகவிருந்தாலும் முக்கிய மாக முப்பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். அவை

 

 1. இந்நாஃப்ரிக்கர் (கருப்பர்)

2. துரேனியர் (மஞ்சள்-சிவப்பு)

3. ஆரியர் (மாநிற வெள்ளை)

 

இப்போது, இவர்களில் இந்தாஃப்ரிக்கர் முக்கியமாகத் தென்மேற்குப் பசிபிக் தீவுகளிலும், மத்தியாஃப்ரிக்காவிலும், தென்னாஃப்ரிக்காவிலும் (அமெரிக்காவில் இருப்பவர் தவிர்த்து), வசிக்கின்றனர்.

 

துரேளியர்கள் முக்கியமாக கிழக்கு ஆசியாவிலும், மத்திய ஆசியாவிலும், வடக்கு யூரேஷியாவிலும் (அமெரிக்க இந்தியர் தவிர்த்து) வசிக்கின்றனர். ஆரியர்கள் முக்கியமாக இந்தியாவி லும், ஈரானிலும் (பாரசீகம்). அய்ரோப்பா விலும், வடக்காஃப்ரிக்காவிலும் தென் வாஃப்பிரிக்காவிலும் வசிக்கின்றனர். இந்தாஃப்ரிக்கள் மொழி, துரேனிய மொழி, ஆரிய மொழி, இந்த இனப் பிரிவினையின் அடிப்படையிலே வந் தவை. ஆயினும் பல்வேறு மாற்றங்களை அடைந்துள்ளன; அடைத்து வருகின்றன. கெதேயில் குடியேறும்வரை அதாவது கி.மு. 2300 வரை நார்டிக் மக்களின் தெற்கிலே மேற்கு துருக்கிஸ்தானத்தில் துரேளியர்களும் (துருக்கியர்) (மேரியர்) (கி.மு.4300 வரை) பின்னர் ஹிட்டைட்கம் (கி.மு.2300 வரை) இருந்தனர். நார்டிக் மக்கள் துவக்க காலத்தில் எண்ணிக் கையில் குறைவாகவிருந்ததால், தங்களை விட நாகரிக மக்களான சுமேரியர்களின் சம்பந்தத்தையும் கருத்துக்களையும் பழக்க வழக்கங்களையும் கைக்கொண்டனர்.

 

நார்டிக்குகளும் ஹிட்டைட்சுகளும் கலந்து வாழ்ந்ததன் விளைவாக துரேனிய மொழி, நார்டிக் மொழி சார்பினதாக மாற்றம் பெற்றது. ஹிட்டைட்ஸ் மொழியி விருந்தும் பல சொற்கள் சுவீகரிக்கப் பட்டன.

 

நார்டிக்குகளின் படையெடுப்பு

 

துரேனியர்கள் தெற்கே பரவியபோது, நார்டிக்குகள் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறி பாக்ட்ரியானாவில் குடியே றினர். இவ்வட்டார மக்களின் மொழிக் கிணங்க தங்கள் மொழியிலும் மாற்றம் செய்து கொண்டனர். இங்கு வசித்த மக்களின் கலாச்சாரம் இரானிய கலாச் சாரத்தைப் போன்றதே.

 

இவர்கள் தெற்கு நோக்கிப் படை எடுக்கத் தீர்மானித்தபோது இவர்களு டைய மொழி வேதம் சமஸ்கிருதம். கி.மு.1400இல் வடமேற்கிலிருந்து இந்தி யாவிற்குள் வந்தபோது இந்த வேத சமஸ்கிருத மொழியைத்தான் தங்கள் இலக்கியங்களில் கையாண்டனர். இவர்கள் அடிநாளில் இனங்களாகவும், வகுப்புகளாகவும் பிரிந்திருந்ததாகவும் எழு ஆற்று நாட்டில் (மத்திய ஆசியா) வசித்து வந்ததாகவும் திட்டவட்டமாக அறியக் கிடக்கிறது. இவர்கள் இரு குழுவினராக இருமுறை இந்தியாவில் நுழைந்தனர். இரு குழுவினரும் ஒரே மொழியை இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். பின்னவர் மொழியில் பாரசீகம், கிரேக்கக் கலப்படம் அதிகம் இருந்தது. இரண்டாம் படையெடுப்பே பிற்கால வாலாற்றுக்கு முக்கியமானதாகிறது.

 

கி.மு. 750இல் இவர்கள் காஸ்பியன் கடல் நோக்கி நகர்ந்தனர். பாரசீகத்தில் தடை ஏற்பட்டது. பாரசீகர்கள் தாக்கு நல்கள் வலுக்கவே, இவர்கள் தனித்தனிக் கும்பலாகப் பிரிந்து சென்று, தனித்தனித் தலைவர்கள் தலைமையில் தனி இனங்களாகி விட்டனர்.

 

இந்தப் பிரிவினர்களில் ஒருவரான காஸ்பி சாதியாரின் பெயரடியாகவே காஸ்பியன் கடல் எனப் பெயரிடப்பட்டது. இவர்களில் பெரும்பகுதி கிழக்கே பாமிர் மலைப்பகுதிகளை நோக்கி நகர்ந்தனர்; அங்கிருந்த பழங்குடிகளையும் சிதைந்து ஒடுக்கினர்.

 

வடகிழக்கு ஈரானில் குடியேறியவர் களில் குடியேறிய இந்த நாாடிக் சாதியார்களில் முக்கியமானவர்கள் ஆகி-கோராங்மீ பாஸியானி ஆகியோர். ஆரி சாதியார் முதலில் தங்கிய வட்டாரத்திலிருந்த ஆற்றுக்குத் தங்கள் பெயரடியாக ஆரியஸ் நதி என்று பெயரிட்டனர்.

 

ஆரியர் என்ற சமஸ்கிருத மொழியி லிருந்துதான் ஆரியன் என்ற சொல் தோன்றிற்று. ஆரியன் என்றால் மேல் மக்கள், ஆளும் இனம் என்று பொருள் ஆகியது.

 

சிதறிய நார்டிக்குகள்

 

இந்த நார்டிக் இனத்தார் பிற்காலத்தில் பல்வேறு குழுவினராகச் சிதைந்து பல்வேறு வட்டாரங்களில் பரவிய போது அவர்களுடைய அடிநாள் பொதுப் பெயரும் மறைந்தது! தனிப் பிரிவினராகத் தனித்தனிப் பெயர்களிட்டுக் கொண்டனர். பாமீர் வட்டாரத்தில் பாமிரியர்கள், குஷான்கள் என்று பெயர் கொண்டனர். இதுவே பாக்ட்ரியானா நாடு. இதில் புக்காராவும் சேர்ந்தது. இதன் தலைநகர் இப்போது வட ஆஃப்கானிஸ்தானத் திலுள்ள பால்க் என்பது.

 

தொக்காரி, குஷான்கள், எப்தா லைட்ஸ், சாக்கே, சாக்கியர் ஊசன் ஆகிய சாதியார் (உட்பிரிவினர்) இணைந்து பெரும் சாம்ராஜ்யத்தை நிர்மாணித்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் அடிப்படையில் நார்டிக் மக்களே. பாக்ட்ரியானாவில் குடியேறியவர் வெள்ளை ஹுனர்களெனச் சீனர்களால் அழைக்கப்பட்டனர். இவர்களும் நார்டிக்குகளில் ஒரு பிரிவினரான கோத்திக் இனத்தவர்களேயாவர். இந்தியாவுக்குள் வந்தவர்கள் ஆரிய மொழியினர் என்ப தற்கு பல்வேறு சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

 

அலெக்சாண்டர் படைஎடுப்புக்குப் பின்னர், அதாவது கி.மு. 701ஆம் ஆண்டு வாக்கில் வடமேற்கு இந்தியாவில் வேத சமஸ்கிருத மொழி செல்வாக்கற்றுப் போயிற்று. இப்போதுள்ள சமஸ்கிருத மொழி அப்போது அங்குக் கிடையாது.

 

இப்போதைய சமஸ்கிருதம்

 

குஷான் வம்சத்தைச் சேர்ந்த கனிஷ்கரின் ஆட்சி கி.மு. 53இல் துவக்கமாகிறது. இந்தியாவில் விக்ரம சகாப்தத்தைத் தோற்றுவித்தவர் இந்த கனிஷ்கரே. மற்றும், அக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கி வந்த கிரேஷிய கலாச்சாரங் களையும், கிரேக்க மொழியையும் ஒழித்து, நார்டிக் மொழியை அடிப்படையாகக் கொண்ட இப்போதைய சமஸ்கிருத மொழியைத் தோற்றுவித்தார். இது பழங்குடி யினர் சொற்களைக் (பிராக்கிருதம்) கொண்டது. எனவே, இப்போது வழங்கப்படும் சமஸ்கிருத மொழி கி.மு.58இல் தோன்றிய தெனலாம்.

 

கி.பி. 123-153ஆம் ஆண்டுகளில் ஆண்ட இரண்டாவது கனிஷ்கர் பவுத்தர். இவர் காஷ்மீர் வட்டாரங்களில் பவுத்த மதக் கொள்கைகளை தற்கால சமஸ்கிருத மொழியில் எழுதிப் பழங்குடிகளிடையே பரப்பினார். இவற்றை யெல்லாம் கவனிக்குமிடத்து சமஸ்கிருத மொழி எப்போது பிறந்தது? அதன் அடிப்படை மூலம் என்ன? எம்மொழிகளிலிருந்து பிறந்தது? இது இந்தியாவில் எப்போது எவ்விடம் நுழைக்கப்பட்டது? என்பன, சந்தேகமறத் தெளிவுபடுகின்றன.

 

இந்த சமஸ்கிருத மொழி பாக்ட்ரியானாவிலிருந்துதான் வந்தது என்று தற்கால அறிஞர்கள் பலர் திட்டமாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

 

இந்திய சமஸ்கிருத மொழி வரலாறு

 

இந்தியாவில் நுழைக்கப்பட்ட சமஸ்கிருதமொழி வேதகால சமஸ்கிருதமென்றும், தற்கால சமஸ்கிருத மென்றும் இருவகைப் படும் என்பதும், இவற்றின் பிறப்பு வரலாறும் மேலே தெளிவுப்படுத்தப்பட்டது. அதாவது வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வந்த நார்டிக் ஆரியரால் இறக்குமதி செய்யப்பட்ட மொழி என்பது விளக்கப்பட்டது.

 

சமஸ்கிருதம் என்ற சொல்லுக்கு, திரட்டித் தொகுத்தது, புதுப்பித்து அமைக்கப்பட்டது என்று பொருள். பழங்கால மொழிகளுக்கும் இந்தப் புதுமொழிக்கும் வேற்றுமை காணவே இப்பெயரிடப்பட்டது. பிராமணிய இந்தியா காலத்தில் வழங்கப்பட்ட சமஸ்கிருதத்திற்கும் அதற்கு முன்னைய கால சமஸ்கிருதத்திற்கும் பல வகைகளிலும் வேற்றுமை காணப் படுகிறது. வேதகால சமஸ்கிருதம், கலைக்கால சமஸ்கிருதத் திலிருந்து பல வகைகளிலும் மாறுபட்டது. இந்த சமஸ்கிருத மொழி, இந்தோ ஜெர்மனிய அல்லது ஆரிய மொழியிலிருந்து பிறந்த கீழ்க்கோடி வட்டாரப் பிரிவாகும். இந்து ஆரியர்கள், வடமேற்கிலிருந்து தான் இந்தியாவுக்குள் வந்தனர் என்பது மக்கள் சரித்திரங்களால் உறுதிப்படுகிறது. இந்து ஆரியர்கள் கிழக்கு கபூலிஸ்தான் மலை வட்டாரங்களிலிருந்து பஞ்சாபுக்கும் அதன் பின் யமுனை கங்கை ஆற்று வட்டாரங்களுக்கும் வந்தனர் என்பது அவர்களுடைய பரம்பரை இலக்கிய ஏடுகளிலிருந்தே அறியக் கிடக்கிறது. வேத ஆரியர்கள், ஈரானிய மக்கள் ஆகிய இரு இனத்தவர்களின் மொழி மத நூல்கள் ஆகியவற்றிற்குள்ள இந்த ஜெர்மனிய குடும்ப சந்ததிகளேயெனவும், இருவரும் முன்னர் சேர்ந்திருந்து பின்னர் பிரிந்தவர்களெனவும் தெளிவாகிறது.

 

சமஸ்கிருதத்தின் முக்கியத்துவம் பற்றிப் பெரும்பாலும் மிகைப்படுத்திக் கூறப்படுகின்றன. ஆதித் தாய்மொழியின் கலை மகள் இந்த சமஸ்கிருதம் என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில், இந்த இனத்தைச் சேர்ந்த மற்ற ஆறு மொழிகளான, ஈரானிய ஹெலினிக், இத்தாலிய செல்டிக் ட்யூடர்னிக், லெட்டோஸ்லாவிக் மொழிகளில் இலக்கிய வளமின்மையால் இந்த சமஸ்கிருதம் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த இலக்கியவளமும், ஆங்காங்குப் பல நாடுகளி லுள்ள, தொன்மை மொழிப் புலவர்களின் கூட்டுறவால் ஏற்பட்டதேயாகும். கிரேக்க மொழிக்கும் சமஸ்கிருத மொழிக்கும் அதிக ஒற்றுமை காணப்படுகிறது.

 

இந்திய எழுத்துக்களின் பிறப்புப் பற்றிய வரலாறு இன்னும் புலனாகவில்லை. அசோகர் காலத்தில் புத்தமத அறமொழிகள் பாலி மொழியிலே பாறைகளிலே செதுக்கப் பட்டிருக்கின்றன. மவுரிய ஆந்திரா வரிவடிவங்களுக்கு முன்னைய வரிவடிவம் பற்றி விளக்கம் கிடைக்கவில்லை.

 

எனவே, பிராமணர்கள் எதையும் எழுதவில்லை என்றும், அவர்களுடைய மொழிக்கு அப்போது வரிவடிவம் (எழுத்து இல்லையென்றும், சமஸ்கிருத வரிவடிவம் பிற்காலத்தில் இந்திய மொழி வரிவடிவங்களிலிருந்து அமைத்துக் கொள்ளப்பட்டதே என்றும் தெளிவுபடுகிறது. ராயல் ஏசியாடிக் சொசைட்டி ஜர்னலின் 14ஆவது பாகத்தில் இந்த மெய்மை தெளி வுறுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் ஒரு மொழியென்றாலும்கூட இது இந்தி யாவில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி மொழியாக வுமிருந்ததில்லை, பேச்சு மொழியாகவும் இருந்ததில்லை. அக்காலத்தில் ஆண்ட கிரேக்க பாக்ட்ரியானா மன்னர் கியூக்ராடைட்சின் சந்ததியார் நாட்டு மொழியான பிரம்மி மொழியில் தான் நாணயங்களை அச்சிட்டனர். இந்த பிரம்மி எழுத்துக்கள்தான் இப்போது வழங்கப்படும் நகரி தேவ நகரி எழுத்துக்களுக்குத் தாயாகும். இந்த பிரம்மி மொழியின் அடிநாள் வரலாறு என்ன என்பது இன்னும் கலைஞர்களாலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

 

பாக்ட்ரியானாவிலிருந்த இந்த வடக்கத்தித் தலைவர்கள் அடிப்படையில் கிரேக்கர்களேயாகையால், இவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது திருத்தப்பட்ட நார்டிக் மொழியை (சமஸ்கிருதம்) இந்தியாவில் நுழைக்க அதிக அக்கறை கொள்ளவில்லை. கி.மு. 58இல் வட இந்தியாவில் ஆண்ட குஷான் குலத்தினரே இந்த சமஸ்கிருத மொழியை 2 இந்தியாவில் பரப்பும் பணியை மேற்கொண்டனர். முதலாவது கனிஷ்கர் வடமேற்கு இந்தியா வட்டாரங் களைப் பிடித்த பின் இந்த சமஸ்கிருதத்தைப் பரப்புவதில் கருத்துச் செலுத்தினார்.

 

இதற்குமுன், நாட்டு மொழிகளுடன் கிரேக்க மொழி தான் ஆட்சித் துறையில் கைக்கொள்ளப்பட்டிருந்தது. கனிஷ்கர் காலத்தில் கிரேக்க மொழி, நாட்டு மொழி களினிடத்தை சமஸ்கிருதம் பிடித்துக்கொண்டு அரசாங்க மொழியாயிற்று.

 

பாக்ட்ரியானாவுக்கு வருமுன் நார்டிக் ஆரிய தொக்காரிகளின் மொழி சமஸ்கிருதமாக இருந்தாலும், பாக்ட்ரியானாவில் அந்நாட்டு மக்கள் மொழிகளைத் தழுவி கி.மு.546-330இல் பெரும் மாற்றம் செய்யப்பட்டது. முக்கியமாக கி.மு. 330- 126இல் கிரேக்கர் காலத்தில் அதிக மாறுதல் பெற்று உருமாற்றமடைந்தது, இந்த சமஸ்கிருத மொழி.

 

எனவே, இப்போது வழங்கப்படும் நவீன சமஸ்கிருதம் அரசுத் துறையில் கி.மு.58ஆம் ஆண்டு வாக்கில்தான் நுழைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்படுகிறது. இது ஆட்சி ஆதிக்கம் கொண்ட இனத்தவர்களின் மொழியாகவிருந் ததால் ஆளப்பட்ட இந்நாட்டுப் பழங்குடி இலக்கியப் புலவர்கள் இந்த அயல்மொழியை ஏற்றுக் கொள்ள சமஸ்கிருதம் ஒரு தாய்மொழியல்ல அதிக காலமாயிற்று.

 

மேலேயுள்ள வரலாறுகளால் விளக்கமாவது என்ன?

 

வேதகால சமஸ்கிருத மொழியும், நவீன சமஸ்கிருத மொழியும் மேற்கு இந்தியாவில் அந்நிய நாட்டினரால் நுழைக்கப்பட்டவை என்பதும், இவற்றிலிருந்து இப்போது வழக்கிலுள்ள சமஸ்கிருத மொழி இந்தியாவின் பழங்கால மொழிகளுக்குத் தாய்மை மொழியாக இருக்க முடியாது என்பதும், சமஸ்கிருதம் பிறப்பு வகையிலும், இந்தியாவில் இடம்பெற்ற வகையிலும் அண்மைக்காலத்தினதே என்பதும், அதாவது அண்மைக்காலத்தில் பிறந்து அண் மைக் கால இந்தியாவில் இடம்பெற்ற மொழியே என்பதும் (சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்) தெளிவுபடுகிறது.

 

பர்மிரியாவிலிருந்து இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், பல புதிய மொழிகளையும் நுழைத்தனர். வடமேற்கில் வழங்கப்படும் ஹிந்தி (இந்துஸ்தானி) மொழியும் இதிலொன்று. இம்மொழி இரானிய (பாரசீக) மொழியி லிருந்து பிறந்தது.

 

மேற்கிலிருந்து இந்தியாவுக்குள் படை எடுத்தவர்கள் அண்மைக்காலத்தில் நுழைத்ததே இம்மொழியும். இதுவும் அண்மைக்கால நுழைவு மொழி என்பதற்குப் பல சரித்திர ஆதாரங்கள் உள்ளன.

 

இந்த ஆராய்ச்சியில் அறியக்கிடப்பது என்ன வென்றால்:

 

தற்கால ஆரிய மொழிகள் எல்லாம் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பழங்காலத்தில் வழங்கிய இந்தோனேஷிய மொழியிலிருந்தே பிறந்தவை என்பதும், திராவிட மொழி களுக்கெல்லாம் பிற்பட்டவை என்பதும், திராவிட மொழி களிடையே முன்னணியிலும் பின்னணியிலும் அலைந்து கொண்டிருந்ததென்பதும், படை எடுப்பாளர்களுக்குச் சாதகமாக இருந்ததென்பதும் ஆகும்.

 

தற்கால புலவர்கள் தீட்டியுள்ள மொழி வரலாற்று நூல்கள் முழு ஆராய்ச்சியின் சித்திரமாக இல்லை. மக்கனின் இனம், மொழி, பிறப்பு வளர்ச்சி வரலாறுகளில் ஆழ்ந்த கருத்துச் செலுத்தாமலேயே சரித்திரம் தீட்டி விடுகின்றனர். மக்கள் பிறந்த இடம், வாழ்ந்த இடம், அந்தந்தக்கால பண்புகள் கோட்பாடுகள் அவர்கள் பேசிய வெவ்வேறு மொழிகளின் அடிப்படை வளர்ச்சி வரலாறுகள் அம்மொழிகள் எங்கெங்கே எவ்வெப் போது பேசப்பட்டன; எங்கெங்கே எவ்வெத் துறைகளில் மாற்றங்களடைந்தன; எதனால் அம்மாற்றங்கள் செய்யப்பட்டன முதலிய வரலாறுகளையும் கண்டு தொகுத்திருந்தால், சரித்திர வரலாறுகள் அதிகப் பயனுள்ளதாக இருக்கும். இப்போது இத்துறையில் போதுமான ஆதாரங்கள் இன்மையால் இம்மொழி வரலாற்று ரகசியங்களை அறிவது கடினமாக வுள்ளது.

 

ஆரிய இனமொழி

 

ஆரியன் என்ற பெயர் இரானிய இனமான ஆரியை (ஹச) என்பதன் அடிப்படையாக வந்தது; மொழி பழக்க வழக்கங்களும் மேற்படி இனத்தவரதே. இந்த ஆரிய இனமொழியிலிருந்தே சமஸ்கிருதம் வந்தது.

 

சமஸ்கிருத மொழியின் அடி வரலாற்றைத் திட்டவட்டமாக அறிய பல்வேறு நார்டிக் மக்கள் ஒன்றாக இருந்த அடிநாளி லிருந்து, பின்னர் பல்வேறு காலங்களில் பல்வேறிடங்களில் பேசிய மொழிகளின் வரலாறுகளையும் கவனிக்க வேண்டும்.

இந்தியாவில் வழங்கிய இந்தோனேஷிய மொழியை, ஈரானியர் சுலைமான் மலைகள் வழியாக ஈரானிய பீட பூமிக்குக் கொண்டு சென்றனர். இந்தக்காலம் முதல் அம்மக்களின் வாழ்க்கைத் துறைகளிலும் மொழித் துறைகளிலும் பற்பல மாறுதல்கள் ஏற்படலாயின.

 

கி.மு. 7700-7500 ஆண்டு வாக்கில் நார்டிக்குகள் துரேனியர் களுடன் தொடர்பு கொண்டு வந்துளர்.

 

மேற்கு துருக்கிஸ்தானத்தில் கி.மு. 7500ஆம் ஆண்டு வாக்கில், சுமேரியர்கள் காலூன்றிய காலத்தில், நார்டிக்குகள் வடமேற்காகப் படர்ந்து தமது தாயகமான கெத்திக் நாட்டுக்கு மீண்டும் திரும்பினர். அதன்பின் கி.மு. 4300 வரை... அதாவது மேற்கு துருக்கிஸ்தானில் சுமேரியருக்கு பதில் ஹிட்டைட்சுகள் ஆதிக்கம் கொண்டபோது, இரு இனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. மொழி பழக்க வழக்கத் தொடர்புகளே அதிகம் கவனிக்க வேண்டியதாகும். அடுத்து 2000 ஆண்டுகளில் நார்டிக்கு களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்தது. எனவே அவர்கள் தனித்தனிக் குழுவினராகப் பிரிந்து பல திக்குகளிலும் பரவினர்.

 

தற்கால சமஸ்கிருத மொழியிலுள்ள ஈரானிய, பாரசீக, பாமீரிய, கிரேக்க மொழிக் கலப்படங்களை நீக்கிவிட்டால், இது பழங்கால மாஸாகெட்டே அல்லது தேக்காரி மொழியாகும். கி.மு. 1000-750இல் வழங்கிய சாக்கிய மொழியும் இவ்வாறே இருக்கும்.

 

மொழிகளின் தாயகம்

 

பல்வேறு ஆரிய மொழிகள் பிறந்த அடிப்படைத் தாய் மொழியும், இந்தாஃப்ரிக்கன் மொழிகளும், துரேனியன் மொழிகளும் பிறந்த தாய்மை மொழியும், வங்காளக் குடாக்கடல் கரையோரத்தை அடுத்த வட்டாரங்களிலும் அல்லது இந்தியாவின் உட்பகுதியிலும் பிறந்தனவேயாகும். மற்றும், இப்போது தக்காணத்தில் வசிக்கும் திராவிட மக்களின் மூதாதைகள் பேசிவந்த தொன்மை மொழியி லிருந்தே, இந்த ஆரிய மொழிகளும் மற்ற மொழிகளும் பிறந்தவையாகும்.

 

கன்னடம், துளு, குடகு, தோடா, கோட்டா, குருக்ஸ், மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி ஆகிய திராவிட மொழிகள் பால்-திணை ஆகியவை களுக்காக பல்வேறு குறிகளைச் சேர்த்துக் கொண்டுள்ளன.

ஜாவா, சுமத்திரா, மலேயா வட்டாரங்களிலும், வங்கக் கடல் கரைப்பகுதியிலும், இன்னும்பல தொன்மை மொழிகள் பேசப்படலாம்.

 

இந்தாஃபிரிக்க இனத்தார் வடமத்திய இந்தியாவிலும், துரேனியர்கள் பர்மாவிலும் அதற்கு வடகிழக்கு வட்டாரங்களிலும், ஆரியர்கள் வடமேற்கு இந்தியாவிலும் இருப்பதாகக் கொள்ளலாம். மற்றும் துரேனிய இனத்தார், திபேத்திய பீடபூமியின் கிழக்குச் சரிவுகளிலும், ஆரிய இனத்தார் சுலபமாக மலைகளைக் கடந்து இரானிய பீடபூமியிலும் இண்டஸ் (சிந்து) ஆற்றின் மேல் படுகை வழியாகக் காஷ்மீரிலும், மேற்குத் திபேத்திலும் (இறுதி குடியேற்றம் கி.மு. 6000) அதற்கு அப்பாலும் குடியேறின ரெனலாம்.

 

இந்தாஃப்பிரிக்கா இனத்தார். கிழக்கு முகமாக பசிபிக் தீவுகளுக்கும், மேற்கு முகமாகத் தென் அராபியா, ஆஃப்பிரிக்கா மூலமாகவும், இந்தோனேஷிய ஆரியர் களால் விரட்டப்பட்டனர். இந்தோனேஷிய ஆரியர்களும் பனிக் கடுமையால் வட இந்தியாவிலும், தென்முகமாகத் தக்காணத்திலும் பரவ வேண்டியதாயிற்று. இது கி.மு. 5000 வாக்கில் நடந்தது. எனவே, ஆரிய இனத்தைத்தோற்றுவித்தவர்களும், இப்போது தக்காணத்திலுள்ள திராவிட மக்களின் இந்தோனேஷியக் கிளை மூலமாக மூதாதைகளே என்கின்றனர். இந்தாஃபிரிக்கர்கள் வெளியேறியதும் இந்தோனே ஷியர் சிந்து நதி வட்டாரத்தில் குடியேறினர். சுலைமான் மலையைக் கடந்து திரும்பி வந்த இரானியர் (ஹிந்துக்கள்) வட தக்காண திராவிட மக்களிடையே வஊடுருவினர். இந்த ஆராய்ச்சியில் காணும் முடிவுக் கருத்தாவது:-

 

 

1.திராவிடருக்கு முற்பட்ட மக்கள்

ஜாவா, சுமத்ரா, மலேயா, இலங்கை, ரோடியர், பெருகு யீச்சுவா, வங்காளக் கடலின் இருமருங்கு கரையோர வட்டார மக்கள்.

 

2. தக்காண திராவிடர்

கன்னடம், துளு, குடகு, கோடா, கோட்டா, குருக்ஸ் (குறும்பர்), மால்டோ, தமிழ், மலையாளம், தெலுங்கு, கூயி, கோண்டி மொழி பேசுபவர்கள் இவர்கள் நீண்ட தலை மக்கள். இது அடிப்படை முக்கியம்.

 

3. இந்தோனேஷியர்

இது வடமேற்கில் பரவிய இனம்; திராவிட மொழியில் திருத்தம் செய்து பேசியவர்கள் வங்க மொழியின் அடிப்படையிலும், பசிபிக் தீவிலுள்ள போலினேஷியர் மொழிகளின் அடிப்படையிலும் ஒப்பனை காணலாம். இந்தாஃபிரிக்கன், துரேனிய மொழிகளுடன் இவைகளும் தோன்றியிருக்கலாம். இவர்களும் நீண்ட தலையுடைய மக்களே.

 

4. ஈரானியர்கள்

(மத்திய தரைக்கடல் வட்டாரத்தினர் - ஹாமைட்கள், ஹிந்துக்கள்):

மத்தியதரை வட்டாரத்தினர் மொழி வட்டாரங்கள் கருங்கடலுக்கு தெற்கே ஈரான், அரேபியா, பழங்கால எகிப்து, கீரீட், மத்தியதரை முகத்துவாரப் பகுதிகள், ஹாமைட்கள் வட்டாரங்கள்: மேற்கு இந்தியா, தென் ஈரான், எத்தோபியா (அபிசினியா) பிற்கால எகிப்து.

 

ஹிந்து - ஈரானிலும் இந்தியாவிலும் ஹிந்தி மொழிகள் பேசும் வட்டாரங்கள். அடிநாளில் இவ்வினத்தவர்களும், இந்தோனேஷியர் களிடமிருந்து தோன்றியவர்களே, இவர்களும் நீண்ட தலைகளையுடையவர்களே.

 

5. செவ்ட்டோ ஸ்லாவ்ஸ்

சிறிய தலையுடையவர்கள்; பாமீரியர், ரஷ்யாவிலுள்ள ஸ்லாவ்கள், பால்கள் முதலிய வட்டார மக்கள், அண்ட்டோலியாஹெலன்கள், கிரீசிலும் சுற்று வட்டாரத்திலும், வசிப்போர், மத்திய அய்ரோப்பிய ஆல்பைன்ஸ் கெல்டல்கள் (இத்தாலி, சய்பீரியன் தீபகற்பம், மத்திய ஃப்ரான்ஸ், கிழக்கு ஃப்ரான்ஸ் ஆகியவைகளில் வசிப்போர் உட்பட) இவர்களும் ஆதி இந்தோனே ஷியரிடமிருந்து உற்பத்தியானவரே.

 

 

6. நார்டிக் மக்கள்

உருண்ட தலையர்களான ஆரிய மக்கள், சூவியர் நார்வீஜியர், சுவிடன் மக்கள், பிரிசீயர், ஆங்கிலர், சாக்ஸன்கள், துரிங்கியர், ப்வேரியர், செம்னோனிய அல்லது சுவாபியர், அலிமன்னியர், கிம்மேரியர் மேதியர், சூர்டுகள், தோரியர், அல்பேனியர், மற்றும் வீசர். வெரா ஆறுகளுக்கு மேற்கிலும் உர்டன் பர்க் தன் பேடன், அல்சாசுக்கு வடக்கிலும் மேற்கு ஃப்ரான்சிலும் வடக்கு ஃப்ரான்சிலும் வசிப்போர் (மத்தியதர வட்டார புருனட்டுகளையும், அல்பைன் கெல்டுகளையும் ஆங்கிலோ சக்ச்களைத் தவிர்த்தும்).

 

கேதே-சுவிடன், இத்தாலி, ஸ்பெய்ன் ஆகியவற்றிலுள்ள கோத்கள்.

மாஸ்ஸநேத்தே, வடகிழக்கு ஈரான், தோக்கரி, குஷான் பாக்ட்ரியானா, எப்தாலைட்கள்.

 

சாக்கே:- சாக்யோனியாவில் வசிக்கும் வூசுன்கள் உட்பட இறுதியில் கூறப்பட்ட இரு இனத்தவரில் இந்தி யாவில் சிந்தோ இந்திய சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்தவர் களின் சந்ததியாருமுளர். இவர்கள் மொழி சமஸ்கிருதம்.

 

சார்மேதியரான போலந்தியர், உக்ரேனியர், கிம்மேரியர் கெத்தே இனத்தவர்கள் கலப்பட சந்ததியார்.

 

இவர்கள் கெல்ட்டோஸ்லாவ் இனத்திலிருந்து உற்பத்தியானவர்கள். இயற்கை மாறுதல்களால் தனித்தனியாயினர். நாளடைவில், எனவே, ஏற்பட்ட உட்பிரிவுகளால் இவர்கள் அடிநாள் வரலாற்றைக் கொண்டுதான் இவர்களுடைய அடிநாள் உற்பத்தியையும் இனத்தையும் கணிக்கமுடியும்.

 

எனவே, மேற்கண்ட ஆராய்ச்சிக் குறிப்புகளில் இருந்து இன்றைய ஆரியர்கள் என்பவர்கள் பல இடங்களில் பராரியாகத் திரிந்த பல கூட்டங்களில் இருந்து இந்தியாவுக்கு வந்து தங்கிப்போன ஒரு கலப்பு இனக்கூட்டம் என்பதும் இவர்கள் இப்போது தங்கள் தாய்மொழியாகவும் மதமொழியாகவும் பாவித்துக் கொண்டு மற்றவர்களுக்கு வேத மொழி என்று கூறி ஏமாற்றுப் பிரச்சாரம் செய்யும் சமஸ்கிருத மொழி என்பதானது, பல பிரிவு மக்கள் பல இடங்களில், பல காலங்களில் பேசிவந்த பல்வேறு மொழிகளின் சேர்ப்பு மொழியே தவிர, ஒரு குறிப்பிட்ட கால குறிப்பான மொழி அல்ல என்பதும், இதில் எவ்விதமான உயர்வுத் தன்மையும் கிடையாது என்பதும், பார்ப்பனர் அதைப்பற்றி உயர்வாக பேசுவதும் பிரசாரம் செய்வதும் தங்கள் சமய-மத கோட்பாடுகளை உயர்த்திக் கொள்ளவும் நமது மொழிகளை இழிவுபடுத்தவுமே ஆகும் என்பதும் நன்றாய் அறியப்படுகின்றன.

 

(ஆதாரம்: புரட்டு இமாலயப் புரட்டு! தந்தை பெரியார்)

 

 

 

சமஸ்கிருதம் தேவையா? -பெரியார்

 

இந்த நாட்டில் பல காலமாக 'சமஸ்கிருதம்' என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந்நாட்டில் புகுத்தி, அதற்குத் 'தேவ பாஷை எனப் பெயரிட்டுக் கடவுள்கள் தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தால் புரியும் பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

 

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100-க்கு 97 பேர் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் கலாச்சாரத்திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந்நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்து வரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர்கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்களுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பள 'மேலோர்' மொழியாக சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

 

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃபசர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரோஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவனுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரோஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமஸ்கிருத ஆசிரியருக்குப் பெயர் 'புரோஃபசர்', தமிழ் ஆசிரியருக்குப் பெயர் ஆசிரியர்.

 

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்ஸி காலேஜில் புரோஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு.குப்புசாமி சாஸ்திரி (என்ற ஞாபசும்) என்பவர் வாங்கின சம்பளம் சுமார் ரூ. 300க்கு மேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு.பனகல் இராஜா அவர்களே இதைக் கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, 'நீங்கள் இதைக் கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள்' என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமை வாய்ந்தவர் என்றபோதிலும் கூட அந்தமாதிரி அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப் பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக் கூடும்.

 

பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937-ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப்படையாகவே பல கூட்டங்களில் பல சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.

 

இன்று தமிழ்நாட்டில் 'சமஸ்கிருதம்' என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.

 

ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய 'இலக்கிய காவியங்களையும்', தெய்வீகத் தன்மையும்' தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதனாலும் அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன்மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அனக்க வேண்டும்.

 

உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பலராலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றதென்றால், அது 'புராதன மொழி' என்பதோ அல்லது தெய்வாம்சம் உள்ள மொழி' என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன்மையையும் பொறுத்ததேயாகும்.

 

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.

2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பி வர இயலும்.

 

3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திரமாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம்மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக்கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலைமையில்

இருக்கிறோம்.

 

இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக 'தேவ பாஷை'யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல பல ஆண்டுகளுக்கு முன்பே, 'இல்லை' என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, 'பேச்சு வழக்கு இல்லாத ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், 'தாய்பாஷை? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?

 

இந்தியும் சமஸ்கிருதமும் தேசிய மொழிகளா?-பெரியார்

 

இந்தி நம் நாட்டுச் சீதோஷ்ணத்திற்குப் பொருத்தமற்றது; நம் நாக்குக்கு ஏற்க முடியாதது; நமக்குத் தேவையற்றது. "இந்தி, மனிதர்களை மந்திகளாக்கும்' என்று அன்பர் திரு.வி.க. அவர்கள் கூறினார்கள். அது உண்மையிலும் உண்மை. உண்மையிலேயே இந்தி ராமாயணத்தில்தான் அதாவது வடமொழி ராமாயணத்தில் தான் நாம் முதலாவதாகக் குரங்குகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். அதைப் புகுத்துவது தான் இந்தியின் தத்துவம். எனவே தான், அதை இவ்வளவு கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டியிருக்கிறது. சென்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இரண்டு பேர் ஜெயிலில் இறந்தார்கள் என்றால், இன்றைய போராட்டத்தில் 200 பேருக்கும் மேலாக வெளியிலேயே இறக்க நேரிடக்கூடும். சற்றேனும் மனிதத் தன்மையோடு நீங்கள் வாழ வேண்டுமென்று நினைப்பீர்களானால், இந்தியை ஒழிக்க நீங்கள் கட்டாயம் கங்கணம் கட்டிக் கொள்ள வேண்டும். தாய்மார்களும் போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். என்ன விலை கொடுத்தேனும், நாம் போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இது கடைசிப் போராட்டம் வெற்றி அல்லது தோல்வி, இரண்டிலொன்று பார்த்துவிடத்தான் வேண்டும்.

 

இந்தியில் மெச்சத் தகுந்த கலைகளே கிடையாது. அதிலுள்ள கலைகள்யாவும் துளசிதாஸ் ராமாயணமும்,கபீர்தாஸ் சரித்திரமுந்தாம்; மநுதர்மமும், பாகவதமும்தான். இவற்றின் தன்மைதான் தெரியுமே உங்களுக்கு. இந்தி மொழி தலைசிறந்த அறிஞர்களைப் பெற்றெடுக்கவில்லை என்று திரு.வி.க. அவர்கள் குறிப்பிட்டார். இந்தி உற்பத்தி செய்த அறிவாளிகள் யார் என்றால், நோகாமல் பதவிக்கு வந்த நேருவையும், அவருடைய அய்யாவையுந்தான் குறிப்பிட வேண்டும். அவர்களது தியாகம் இன்று அந்தக் கூட்டம் குடும்பத்தோடு கொள்ளையடிப்பது (உங்களுக்குத் தெரிந்ததுதான்); வேறு ஆட்களைக் குறிப்பிட முடியாது. தமிழ் மொழியோ எண்ணற்ற கலைகளையும், கலைஞர்களையும், அறிஞர்களையும், சித்தர்களையும், முத்தர்களையும் தோற்றுவித்திருக்கிறது.

 

இந்தியில் கலை இல்லை; காவியம் இல்லை; நீதி நூல் இல்லை. அம்மொழி மூலம் அறியக் கிடக்கும் விஞ்ஞானத் தத்துவங்களும் இல்லை. ஆகவே, 100க்கு 97 போர் விரும்பாத அம்மொழி என் இங்கு புகுத்தப்பட வேண்டும்? இங்குள்ள பார்ப்பன கோஷ்டியார், இத்திராவிட நாட்டின் கலைகளையும் கலாச்சாரத்தையும் அடியோடு அழித்து, இந்நாட்டை வடநாட்டுக்கு வால் நாடாக்கப் பார்க்கிறார்கள். இதுதான் மர்மமே ஒழிய 'இந்தி தேசிய மொழி; ஆகவே, எல்லோரும் படிக்க வேண்டும்' என்று கூறுவதெல்லாம் பித்தலாட்ட வார்த்தைகள். இந்தி தேசிய மொழியாயின், எல்லோரும் கட்டாயமாக இந்தியைப் படித்துத்தான் ஆக வேண்டும் என்று வெளிப்படையாகக் கண்டிப்பாகக் கூறிவிடட்டுமே! இந்தி அல்லது சமஸ்கிருதம் படியுங்கள் என்கிறார்களே, அது ஏன்? இந்தி தேசிய மொழியா? அல்லது சமஸ்கிருதம் தேசிய மொழியா? நீங்கள் சற்று அருள் கூர்ந்து சிந்தித்துப் பாருங்கள்.

 

தேசியம் என்பது பித்தலாட்டம்; வடமொழியை நுழைத்து, அதன் மூலம் வருணாசிரமத்தை நுழைத்து, பெருமைமிக்க திராவிட மக்களைச் சூத்திரர்களாக்கி, என்றென்றும் அடிமைகளாக ஆக்கிவைத்துக் கொள்ள, பார்ப்பனக் கூட்டம் செய்யும் பச்சைப் பித்தலாட்டம்தான் இது. நமது தாய்மார்களைச் சூத்திரச்சிகளாக, நமது ஆடவர்களைச் சூத்திரர்களாக, நமது பழங்குடி மக்களைப் பஞ்சமர்களாக, சண்டாளர்களாக, நமது கிறித்துவத் தோழர்களையும், முஸ்லிம் தோழர்களையும் மிலேச்சர்களாக வைத்திருக்கச் செய்யப்படும் சூழ்ச்சிதான் இது. 'கன்னிகாதானம்' என்பதை வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் என்று மாற்ற எவ்வளவு சிரமப்பட இருந்தது? 'மாங்கல்ய தாரணம்' என்பதை ஒழிக்க எவ்வளவு இம்சைப்பட வேண்டி இருந்தது? மற்றும், தேவை இல்லாத சடங்குகளை, புராண இதிகாசக் குப்பைகளின் மீதும், வெறும் கற்கடவுள், செம்புக் கடவுள் இவற்றின் மீதும் இருந்த மூடநம்பிக்கையையும், மூட பக்தியையும் மாற்ற எவ்வளவு காலம் ஆகியது? இவ்வளவு முற்போக்கும் மறுபடியும் அழிந்து போக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்களா?

 

சூத்திரன் என்ற வார்த்தையைக் கைவிட்டு 'திராவிடன்' என்று பெருமிதத்தோடு கூறிக்கொள்ளும் நீங்கள், மறுபடி சூத்திரனாக மாற விருப்பம் கொள்வீர்களா? இந்த முற்போக்கைக் கண்டு அஞ்சும் பார்ப்பனக் கூட்டம் வட நாட்டாரின் கூலிகளாகி, அவர்களுக்கு வால்பிடித்து நம்மவர் சிலரை விபீஷணர்களாக்கிக் கொண்டு, தேசிய மொழி என்ற போரால் நம்மீது வடமொழியைச் சுமத்துகிறது என்றால் நம்மை, நம் நாட்டை வட நாட்டாருக்குக் காட்டிக் கொடுக்கிறதென்றால் நாம் அதற்கு இடங்கொடுக்கலாமா?

 

தோழர்களே! தாய்மார்களே! திராவிடர் ஆரியர் போராட்டம், அதுவும் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாது இருந்துவரும் இப்போராட்டம், இன்று ஒரு முடிவான கட்டத்திற்கு வந்துவிட்டது. இதை முடித்து வைப்பது நமக்குப் பெருமையுங்கூட நமது பின் சந்ததியார் போற்றிப் புகழக்கூடிய ஒரு அரிய சந்தர்ப்பத்தில் நாம் இன்று இருக்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், நாம் எதிர்காலத்தில் பின் சந்ததியரால் எள்ளி நகையாடப்படுவோம் என்பதோடு, அவர்களின் அடிமைத்தனத்திற்கும் நாமே காரணபூதர்களாகவும் ஆகிவிடுவோம். துன்பத்திற்கும்

 

(பெரியார் ஈ.வே.ரா அவர்கள் சென்னை செயின்ட் மேரீஸ் அரங்கில், 17.7.1948 அன்று ஆற்றிய சொற்பொழிவு)

 

சமஸ்கிருத சனியன் -தேசீயத் துரோகி

 

தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.

 

சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்" என்பதும் ஒரு யோசனை யாகும்.

 

உண்மையிலேயே "தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்" என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும் இந்த இந்து மதத்திலிருந்து

பிறந்த ஜாதிக் கொடுமை, சடங்குக் கொள்ளை, கடவுள் முட்டாள் தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும் தலைவிரித்தாடி அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்தரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமே யாகும். இன்று வருணாச்சிரமதருமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும் சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாச்சிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும். தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்த சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்களின் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்பதற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள மறுத்ததற்கும் காரணமாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குறைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வருணாச்சிரமக் கூட்டத்தார்கள் எல் லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லு கின்றனவென்று கவனிக்கின்றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லு கின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக்கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்த சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாம லிருக்க வேண்டுமானால் அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.

 

ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச்செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும் 54 கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள் போதாதென தேசீய ஆடைகளைப் புனைந்து' ஹிந்தி" என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஹிந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப் படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாச்சிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழய கெளரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரியாதைகாரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த ஹிந்தி பாஷை முதலானவை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிடச் சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள்.

 

ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியார் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபார்சு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமா யிருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பிக்கிளப்புப் பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங்கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியின் சிபார்சைக் கைவிட்டுவிடக் கூடாதென எச்சரிக்கை செய்ய வேண்டும். சில பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும்படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் பல தீர்மானங்கள் செய்து அரசாங்கத்தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சமஸ் கிருதச் சனியன் ஒழியும்.

 

தேசீயத் துரோகி என்ற பெயரில் பெரியார் அவர்கள்

எழுதிய கட்டுரை - குடி அரசு - கட்டுரை - 17.01.1932

 

(முற்றும்)

 

0 Comments: