தாழ்த்தப்பட்டார்
சமத்துவப்பாட்டு
-- பாரதிதாசன் --
ஆக்கியோன் முன்னுரை
1930ல் தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு என்ற பெயரோடு
இந்நூலை எழுதினேன்.
இதை, அப்போது சுயமரியாதைக் கொள்கையைப் பரப்புவதில் எனக்கு
உற்ற துணையாயிருந்தவரும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் என்று கருதப்பட்டவருமாகிய தோழர்
ம. நோயேல் (புதுவை) அவர்கள் இதை வெளியிட்டுப், பெருமக்கட்கு உதவினார்கள்.
அதுவுமின்றி,
வெளியீட்டுப் சிறப்புரையாக,
தோழர் க. இராமகிருஷ்ணன்
தோழர் காசி, ஈ. லக்ஷ்மணப்பிரசாத்
தோழர் அ. ஜெகந்நாத
நாயடு
ஆகியோர் எழுதி, அவ்வெளியீட்டை பெருமக்கட்கு நல்லணம்
அறிமுகப் படுத்தியதும் மறக்க முடியாததாகும்.
இவ்வாறு அந்தாள் வெளிவந்த தாழ்த்தப்பட்டார் சமத்துவப்
பாட்டு, எல்லாராலும் படிக்கப் பட்டது ; அதன் கருத்துக்கள் பரவின.
தாழ்த்தப்பட்ட மக்கள் மக்களோடு நிகரானவர்கள் என்பதும்
மக்களில் உயர்வு தாழ்வு இல்ல என்பதும் இந்நாளில் யாவராலும் ஒப்புக்கொள்ளப் படுகின்றன
என்று பேசப்படுகிறது.
ஆயினும், உயர்வு தாழ்வு நீங்கிவிடவில்லை என்பது மறுக்கக்
கூடியதன்று.
அதனால், என் தோழர் பலர் இதை மீண்டும் அச்சிட்டு வெளியிடவேண்டும்
என்றார்கள் வெளியிட்டேன்.
முதலில் வெளியிட்டவர்க்கும் சிறப்புரை தந்தார்க்கும்
நன்றி!
பாரதிதாசன்
புதுவை. 28 - 8 -
1950
வெளியிட்டவர் முன்னுரை
இந்நூலிற் காணப்படும் பாடல்கள் அனைத்தும் இனிமை உடையவை;
இவற்றின் அடிகள் ஒவ்வொன்றும் சுருங்கியமைந்த விரிந்த விஷயத்தை விளக்குகின்றன; எளிய
நடை.
"தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு" என்னு
மிந்நூலைப் பாரதிதாசன் இயற்றிக் காண்பித்தார்கள்; கண்டதும் எனக்கோர் ஆச்சரிய உணர்ச்சியுண்டாயிற்று;
இந்நூலை அச்சிட்டுச், சொற்பவிலைக்குத் தந்து மக்கள் அனைவர்க்கும் பயன்படுத்த முன் வந்தேன்.
இப் புத்தகத்தை மக்கள், ஆத்திசூடி கொன்றைவேந்தன் முதலிய
நூற்கள் போல் பாராயணம் செய்து இதன் கருத்துக்களை ஓர் ஆயுதமாகக்கொண்டு முன்னேற வேண்டும்
என்பது எனது கருத்தாகும்.
ஆதலின் மக்கள் அனைவரும் இதைப்பெற்று, வாசித்து நலன்
அடைய வேண்டுகிறேன்.
தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு
(குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு).
புவியிற் சமூகம் இன்பம் பூணல் சமத்துவத்தால்
கவிழ்தல் பேதத்தாலடி - சகியே கவிழ்தல் பேத 1
புவிவேகம் கொண்டு செல்லும் போதில் உடன்செல்லாதார்
அவிவேகம் கொண்டாரடி - சகியே அவிவேகம் கொண்டா
2
தாழ்வென்றும் உயர்வென்றும் சமூகத்திற் பேதங்கொண்டால்
வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே வாழ்வின்பம்
உண்டா 3
தாழ்ந்தவர் என்று நீக்கிச் சமுதாயச் சீர்தேடி
வாழ்ந்தது காணேனடி - சகியே வாழ்ந்தது 4
பிறப்பி லுயர்வுதாழ்வு பேசும்சமூகம் மண்ணில்
சிறக்குமோ சொல்வாயடி - சகியே சிறக்குமோ 5
பிறந்த முப்பதுகோடிப் பேரில்ஐங் கோடிமக்கள்
இறந்தாரோ சொல்வாயடி - சகியே இறந்தாரோ 6
இதந்தரும் சமநோக்கம் இல்லா நிலத்தில்
நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ? - சகியே சுதந்தரம் 7
பதம்பெறப் பணிசெய்வோர் பகைகொண்டார் எனில் எந்த
விதம் அஃது கொள்வாரடி? - சகியே விதம் அஃது
கொள் 8
சோதரபாவம் நம்மில் தோன்றா விடில்தேசத்தில்
தீதினி நீங்காதடி - சகியே தீதினி நீங்காதடி
9
பேதம் பாராட்டிவந்தோம் பிழை செய்தோம் பல்லாண்டாக
மீதம் உயிர்தானுண்டு - சகியே மீதம் உயிர்தானுண்டு
10
அற்பத் தீண்டாதார்என்னும் அவரும் பிறரும்ஓர் தாய்
கர்ப்பத்தில் வந்தோரன்றோ? - சகியே கர்ப்பத்தில்
வந் 11
பொற்புடை முல்லைக்கொத்தில் புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார் நம்புவார்? - சகியே சொற்படி யார்நம்புவார்?
12
தீண்டும் மக்களின் அன்னை தீண்டாரையும் பெற்றாளோ
ஈண்டிதை யார் நம்புவார்? - சகியே ஈண்டிதை யார்
நம்பு 13
தீண்டாமை ஒப்புகின்றர் தீண்டாரிடம் உதவி
வேண்டாமல் இல்லையடி - சகியே வேண்டாமை 14
அடிமை கொடியதென்போர் அவர்சோத ரர்க்கிழைக்கும்
மிடிமையை எண்ணாரடி - சகியே மிடிமையை எண்ணாரடி
15
கொடியோர் பஞ்சமர்என்று கூடப்பிறந்தோர்க் கிவர்
சுடும்பேர் வைத்திட்டாரடி - சகியே சுடும்பேர்.
16
தீண்டாதார் பழங்கீர்த்தி தெரிந்தால்
தீண்டாமைப்பட்டம்
வேண்டாதார் இல்லையடி - சகியே வேண்டாதார் இல்லையடி
17
ஆண்டார் தமிழர் இந்நா டதன்பின் ஆரியர் என்போர்
ஈண்டுக் குடியேறினார் - சகியே ஈண்டுக் குடியேறினார் 18
வெள்ளை யுடம்புகாட்டி வெறும்வாக்கு நயம்காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி - சகியே கள்ளங்கள் செய்தா 19
பிள்ளைக்குக் கனிதந்து பின்காது குத்தல்போல் தம்
கொள்கை பரவச்செய்தார் - சகியே கொள்கை பரவ 20
கொல்லா விரதம் கொண்டோர் கொலைசெய்யும் ஆரியர்தம்
சொல்லுக் கிசைந்தாரடி - சகியே சொல்லுக் கிசைந்தாரடி 21
நல்ல தமிழர்சற்றும் நலமற்ற ஆரியர்தம்
பொல்லாச்சொல் ஏற்றாரடிசகியே – பொல் 22
ஏச்சும் எண்ணார்மானம் இல்லாத ஆரியர் மி
லேச்சர்என் றெண்ணப் பட்டார் -- சகியே மிலே 23
வாய்ச்சாலத் தால்கெட்ட வஞ்சத்தால் கலகத்தால்
ஏய்ச்சாள வந்தாரடி - சகியே ஏய்ச்சாள வந்தாரடி 24
மன்னர்க் கிடையில்சண்டை வளர்த்தார்தம் வசமானால்
பொன்னாடு சேர்வார் என்றார் - சகியே பொன்னாடு
சேர் 25
பொன்னாட்டு மாதர்போலும் பூலோகத் தில்லையென்று
மன்னர்பால் பொய்கூறினார் - சகியே மன்னர்பால்
பொய் 26
வான்மறை எனத்தங்கள் வழக்கம் குறித்த
நூலைத்
தேன்மழை என்றாரடி - சகியே தேன்மழை என்று 27
"ஏன்மறை?" எங்கட்கென்றே இசைத்தால் ஆரியர்,
நீங்கள்
வான்புகத் தான்என்றனர் - சகியே வான்புகத் தானென்றனர்
28
மேலேழு லோகம்என்றார் கீழேழ லோகம்என்றார்
நூலெல்லாம் பொய்கூறினார் - சகியே நூலெல்லாம்
29
மேலும் தமை நிந்திப்போர் மிகுகஷ்டம் அடைவார்கள்
தோலோதோல் கூடா தென்றார் - சகியே தோலோதோல் 30
சுவர்க்கத்தில் தேவர்என்போர் சுகமாய் இருப்ப துண்டாம்
அவர்க்குத்தாம் சொத்தம் என்றார் - சகியே அவர்க்குத்தா
31
துவக்கத்தில் ஆரியரைத் தொழுதால் இறந்தபின்பு
சுவர்க்கம்செல் வார்என்றனர் - சகியே துவக்கத்தில்
32
தம்சிறு வேதம்ஒப்பாத் தமிழரை ஆரியர்கள்
நஞ்சென்று கொண்டாரடி - சகியே நஞ்சென் 33
வெஞ்சிறு வேதம்ஒப்பா வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொள்குரடி - சகியே வஞ்சித் 34
அழிவேதம் ஒப்பாதாரை அரக்கரென் றேசொல்லிப்
பழிபோட்டுத் தலைவாங்கினார் -- சகியே பழிபோட்டுத்
35
பழிவேதம் ஒப்போம்என்ற பண்டைத் தமிழர்தம்மைக்
கழுவேற்றிக் கொன்றாரடி --சகியே கழுவேற்றிக்
கொன் 36
ஆரியர்தமை ஒப்பா ஆதித்திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி - சகியே சேரியில் 37
சேரிப் பறையர்என்றும் தீண்டாதார் என்றும் சொல்லும்
வீரர்தம் உற்றாரடி - சகியே வீரர்நம் உற்குரடி 38
வெஞ்சமர் வீரர்தம்மை வெல்லாமற் புறந்தள்ளப்
பஞ்சமர் என்டூரடி - சகியே பஞ்சமர் என்றாரடி 39
தஞ்சம் புகாத்தமிழர் சண்டாளர் எனில் தாழ்ந்து
கெஞ்சுவோர் பேரென்னடி? -- சகியே கெஞ்சுவோ 40
மாதர்சகிதம் தங்கள் மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
போதனை செய்தாரடி -- சகியே போதனை செய்தாரடி 41
சூதற்ற மன்னர்சில்லோர் சுவர்க்கக் கதையை
நம்பித்தீதுக் கிசைந்தாரடி - சகியே தீதுக்
கிசைந்தாரடி 42
உலகம் நமைப்பழிக்க உட்புகுந் தாரியர்கள்
கலகங்கள் செய்தாரடி - சகியே கலகங்கள் 43
கொலைக்கள மாக்கிவிட்டார் குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
நிலைக்களம் என்றரடி - சகியே நிலைக்களம் என்ருரடி
44
சாதிப் பிரிவுசெய்தார் தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி - சகியே நீதிகள் சொன் 45
ஓதும் உயர்வு தாழ்வை ஆரியர் உரைத்திட்டால்
ஏதுக்கு நாம் ஏற்பதோ? -- சகியே எதுக்கு நாம்
46
ஊர் இரண்டுபடுங்கால் உளவுள்ள கூத்தாடிக்குக்
காரியம் கைகூடுமாம் - சகியே காரியம் கைகூடு
47
நேர்பகையாளிஎன்னை நீசனென்றால் என்சுற்றத்
தார்என்னைத் தள்ளாரடி - சகியே சுற்றத்தார்
என் 48
வீரமில் ஆரியரின் வீண்வாக்கை நம்பினால் நம்
காரியம் கைகூடுமோ? - சகியே காரியம் கை 49
ஆரியர் சொன்னவண்ணம் ஆண்டுபல கழித்தோம்
காரியம் கைகூடிற்றா? - சகியே காரியம் கைகூடி
50
எத்தால்வாழ் வுண்டாகும்நாம் ஒத்தால்வாழ்வுண்டாம் இஃது
சத்தான பேச்சல்லவோ? - சகியே சத்தான பேச்சல்லவோ
51
எத்தர்கள் பேச்சைநம்பி இரத்தக் கலப்பை நீக்கிச்
சத்தின்றி வாழ்வாருண்டோ? -- சகியே சத்தின்றி
52
ஆரியப் பேர்மறைந்தும் அவர்வைத்த "தீண்டார்"
என்ற
பேர்நிற்றல் ஏதுக்கடி? -- சகியே பேர்நிற்றல்
ஏதுக்கடி? 53
ஆரியர் பார்ப்பாரானால் அவர்சொன்ன தீண்டாதார்கள்
சேரியில் ஏன்தங்கினார்? - சகியே சேரியில் ஏன்தங்கி
54
ஊர் தட்டிப் பறித்திட உயர்சாதி என்பார் இஃதை
மார்தட்டிச் சொல்வேனடி - சகியே மார் தட்டிச்
55
ஓர் நட்டில் உயர்ந்தோர்மற் றொன்றில்தாழ்ந் தோரை இட்டுச்
சீர் தூக்கிப் பார்ப்போமடி - சகியே சீர் தூக்கிப்
பார்ப்போமடி 56
தீண்டாதார் சுத்தமற்றோர் என்றால்ச்
சுத்தத்தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? - சகியே தாண்டாதார்
57
தீண்டாதார் ஊனுண்டால் தீண்டு மனிதர் வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம் - சகியே மாண்டன பல் 58
பறவை மிருகமுண்டோர் பறையர் என்றல் மனுநூல்
முறையென்பார் பேரென்னடி? - சகியே முறையென்
59
வெறிமது உண்போர்நீசர் என்றல் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? -- சகியே நிறைமுக்கா
டே 60
சீலம்குறைந்தோர் என்றல் சீலமிலாச் சிலரை
ஞாலத்தில் ஏன் தீண்டினார்? - சகியே ஞாலத் 61
மேலைவழக்கங் கொண்டு மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே காலத்தில்
62
சாத்திரம் தள்ளிற்றென்றல் சாற்றும் அதுதான்எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? - சகியே கோத்திரத்
தார் 63
வாய்த்திறம் கொண்டமக்கள் வஞ்சம் யாவையும் நம்பி
நேத்திரம் கெட்டோமடி - சகியே நேத்திரம் கெட்
64
மனிதரிற் றாழ்வுயர்வு வகுக்கும் மடையர்வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி - சகியே இனிச்செல்ல 65
கனிமா மரம் வாழைக்காய் காய்க்காதெனில் இரண்டும்
தனித்தனிச் சாதியடி - சகியே தனித்தனிச் சாதியடி
66
எருமையைப் பசுச்சேர்தல் இல்லை; இதனாலிவை
ஒருசாதி இல்லையடி - சகியே ஒருசாதி இல்லையடி 67
ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை ஒப்பக் கருக்கொள்ளுங்கால்
இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே இருசாதி
மாந்தர்க் 68
உழைப்பால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர் என்றன்னோர்
பிழைப்பைக் கெடுத்தாரடி - சகியே பிழைப்பைக்
கெடு 69
தொழிலின்றிச் சோறுண்ணாச் சுத்தர் அசுத்தர் என்ப
தெழிலற்ற வார்த்தையடி - சகியே எழிலற்ற வார்த்தை
70
உடல்நோய்கள் அற்றபேரை ஒழுக்கமில்லார் என்பவர்
கடலை உளுந்தென்பாரோ? - சகியேகடலை உளுந்தென்
`71
தடையற்ற அன்பினரைச் சண்டாளர் என்றுசொல்லும்
கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே கடையர்க்கு
வாழ் 72
பழிப்பவர்க்கும் உதவும் பாங்கர் பறையர் என்பார்
விழித்துத் துயில்வாரடி - சகியே விழித்துத்
துயி 73
தழைக்கப் பிள்ளை பெறுவோர் தாழ்வாம்; பிள்ளைக்கையரை
அழைப்போர்கள் மேலோர்களாம் - சகியே அழைப்போர்
74
தோள்தான் பொருள்என்போர்கள் தாழ்வாம்; துரும்பெடுக்கக்
கூடாதோர் மேலென்பதாம் - சகியே கூடாதோர் மேலென்ப
75
மாடாயுழைப்பவர்கள் வறியர் இந்நாட்டுத் தொழில்
நாடாதோர் செல்வர்களோ? - சகியே நாடாதோர் 76
ஏரிக்கரையினில் வாழ்ந் திருந்து
பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே சேரியர் தாழ்ந்
77
ஊருக் கிழிந்தோர் காவல்; உயர்ந்தோர் இவர்கள் வாழ்வின்
வேருக்கு வெந்நீரடி - சகியே வேருக்கு வெந்நீரடி
78
அங்கக் குறைச்சலுண்டோ ஆதித்திராவிடர்க்கே
எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே எங்கே 79
புங்கவர் நாங்கள்என்பார் பூசுரர்என்பார் நாட்டில்
தங்கட்கே எல்லாம் என்பார் - சகியே தங்கட்கே
80
ஆதிசைவர்கள் என்பார்; "ஆதிக்குப் பின்யார்"
என்றால்
காதினில் வாங்காரடி - சகியே காதினில் வாங்காரடி
81
சாதியில் கங்கைபுத்ரர் என்பார்கள் சாட்சி, பத்ரம்
நீதியில் காட்டாரடி - சகியே நீதியில் காட்டாரடி
82
வேலன்பங் காளியென்பார் வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார் -- சகியே காலன்தான்
என்ற 83
மேலும் முதலி, செட்டி, வேளாளப் பிள்ளை முதல்
நாலாயிரம் சாதியாம் - சகியே நாலாயிரம் சாதி
84
எஞ்சாதிக் கிவர்சாதி இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி - சகியே பஞ்சாகிப் போனா
85
நெஞ்சில் உயர்வாய்த்தன்னை நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால் - சகியே கொஞ்சமும் 86
செட்டி உயர்ந்தோன் என்பான் செங்குந்தன்
உயர்வென்பான்
குட்டுக்கள் எண்ணாததால் - சகியே குட்டுக்கள்
எண்ணாத 87
செட்டிகோ முட்டிநாய்க்கன் சேணியன் உயர்வென்றே
கட்டுக் குலைந்தாரடி - சகியே கட்டுக் குலைந்தாரடி
88
சேர்த்துயர் வென்றிவர்கள் செப்பினும் பார்ப்பனர்க்குச்
சூத்திரர் ஆனாரடி - சகியே சூத்திரர் ஆனாரடி
89
தூற்றிட இவ்வுயர்ந்தோர் சூத்திரர் என்றுபார்ப்பான்
காற்றினில் விட்டானடி - சகியே காற்றினில் விட்டா
90
தம்மை உயர்த்தப் பார்ப்பார் சமூகப் பிரிவு செய்தார்
இம்மாயம் காணாரடி - சகியே இம்மாயம் காணாரடி
91
பொய்ம்மை வருணபேதம் போனால் புனித்த்தன்மை
நம்மில்நாம் காண்போமடி - சகியே நம்மில்நாம்
காண் 92
நான்கு வருணம் என்று நவிலும் மனு நூல் விட்டும்
ஏனைந்து கொண்டாரடி - சகியே ஏனைந்து கொண் 93
நான்கு பிரிவும் பொய்ம்மை; நான்குள்ளும் பேதம் என்றால்
ஊனத்தில் உள்ளூனமாம் - சகியே ஊனத்தில் உள்ளூ
94
சதுர்வர்ணம் வேதன் பெற்றன் சாற்றும் பஞ்சமர்தம்மை
எதுபெற்றுப் போட்டதடி? - சகியே எதுபெற்றுப்
போ 95
சதுர்வர்ணம் சொன்னபோது தடிதூக்கும் தமிழ்மக்கள்,
அதில் ஐந்தாம் நிறமாயினார் - சகியே அதில் ஐந்தாம்
96
மனிதரில் தீட்டுமுண்டோ? மண்ணிற்
சிலர்க்கிழைக்கும்
அநிதத்தை என் சொல்வதோ? -- சகியே அநிதத்தை 97
"புனிதர்என் றேபிறத்தல்" "புல்லர்என்
றேபிறத்தல்"
எனுமிஃது விந்தையடி - சகியே எனுமிஃது விந்தை
98
ஊரிற் புகாதமக்கள் உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நா
99
நேரிற் பார்க்கத்தகாதோர் நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி - சகியே பாருக்குள் நாமேயடி
100
மலம்போக்கும் குளம்மூழ்கா வகைமக்களை நசுக்கும்
குலமாக்கள் நாமேயடி - சகியே குலமாக்கள் நாமே
101
மலம்பட்ட இடம் தீட்டாம் மக்கள் சிலரைத்தொட்டால்
தலைவரைக்கும் தீட்டநாம் - சகியே தலைவரைக்கும்
102
சோமனைத் தொங்கக்கட்டச் சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி - சகியே தீமக்கள் நாமேயடி
103
தாமூழ்கும் குளம் தன்னில் தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி - சகியே போமாறு தானெ 104
பாதரக்ஷை யணிந்தாற் பழித்துச் சிலரைத் தாழ்த்தும்
காதகர் நாமேயடி - சகியே காதகர் நாமேயடி 105
ஓதவசதியின்றி உலகிற் சிலரைத் தாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே சூதர்க்கு வா 106
தீராப்பகையு முண்டோ திருநாட்டார்க்குள்ளும்
நெஞ்சம்
நேராகிப் போனாலடி? -- சகியே நேராகிப் போனாலடி
107
ஒரைந்து கோடிமக்கள் ஓலமிடுங்கால் மற்றோர்
சீராதல் இல்லையடி - சகியே சீராதல் இல்லையடி
108
தாழ்வில்லை உயர்வில்லை சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி - சகியே வாழ்வெ 109
சூழ்கின்ற பேதமெல்லாம் துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம் - சகியே வாழ்கின்றார்
வா 110
ஆலய உரிமை
(ஆறுமுகவடி வேலவனே கலியாணமும் செய்யவில்லை)
என்ற காவடிச் சிந்தின் மெட்டு.
கண்ணிகள்.
எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
அவ்விதம் நோக்க அவிந்தனவோ நம்
அழகிய நேத்திரங்கள்? 1
திவ்விய அன்பிற் செகத்தையெல்லாம் ஒன்று
சேர்த்திட லாகும் அன்றே? - எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும் ஒன்றே. 2
ஏகபரம்பொருள் என்பதை நோக்க
எல்லாரும் உடற் பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லேஉள்ள தோ சிறப்பே? 3
"தேகம் சுமை நமைச் சேர்ந்ததில்லை!' என்று
செப்பிடும் தேசத்திலே - பெரும்
போகம் சுமந்துடற் பேதம்கொண்டோம்; மதி
போயிற்று நீசத்திலே. `
4
என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
எனக் கிழிவாய்த் தெரியும் - சாதி
தன்னை விளக்கிடுமோ இதை யோசிப்பீர்
சமூக நிலை புரியும். 5
என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
ஏழையர்க் கோர் கடவுள் - எனில்
முன்னம் இரண்டையும் சேர்த்துருக்குங்கள்
முளைக்கும் பொதுக் கடவுள். 6
உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென்பீர் மிகத்
தாழ்ந்தது தாழ்ந்த தென்பீர் - இவை
பெயர்ந்து விழுந்தபின் பேதமிலாததைப்
போடு வீர் அன்பீர். 7
உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
ஒளி மறைவில் தரத்தான் - மிகப்
பயந் திழிந்தோர்களைக் கோயில் வராவண்ணம்
பண்ணின. தோ அறியேன். 8
சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
சூழ்வது பூசனையோ - ஒரு
சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச்
சதியா லோ சனையோ? 9
ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்
என்று மதித்ததுவோ? - சாமி
நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
நீரிற் குதித்ததுவோ? 10
மாலய மாக வணங்கிடச் சாமி
வந்திடு வார் என்றிரே -- அந்த
ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
வழிமறித்தே நின்றிரே. 11
ஆலயம் செல்ல அருகரென்றே சிலர்
அங்கம் சிறந்தாரோ? -- சிலர்
நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
நலிந்து பிறந்தாரோ? 12
தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
சாமி மலைப்பதுண்டோ? - இங்கு
வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
வருத்தித் தொலைப்பதுண்டோ? 13
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ? - எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குலமாக்கிட
மேலும் சமர்த்திலையோ. 14
தன்னை வணங்கத் தகாதவரை
அந்தச்
சாமி விழுங்கட்டுமே - அன்றி
முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி
உருவம் மழுங்கட்டுமே. 15
இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி,
இனத்தினில் பல் கோடி - மக்கள்
தன்னைவணங்கத் தகாதென்று சொல்லிடிற்
சாவதுவோ ஓடி? 16
குக்கலும் காகமும் கோயிலிற் போவதில்
கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ? 17
திக்கட்டுமே ஒரு கோயிலன்றோ? அதில்
சேரி அப்பால் இல்லையே? - நாளும்
பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
நம்புவதோ சொல்லையே? 18
தாழ்ந்தவர் என்பவர் கும்பிடுதற்குத்
தனிக் கோயில் காட்டுவதோ? - அவர்
வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
வம்பினை மூட்டுவதோ? 19
தாழ்த்தப் பட்டார்க்குத்
தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் - அவர்
வாழ்த்தி அழைக்கும் "சுதந்தரம்"
தன்னை
மறித்திடும் நாசமக்கள் 20
தாழ்ந்தவருக்கும் உயர்ந்தவருக்கும் இத்
தாய்நிலம் சொந்தம் அன்றோ? - இதில்
சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
சொல்லிடும் நீதி நன்றோ? 21
"தாழ்ந்தவர்" என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுந்ததுவோ? - எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ? 22
முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரே சமுகம் - என
ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பா விடில் என்ன சுகம்? 23
இப்பெருநாடும் இதன்பெருங் கூட்டமும்
'“யாம்”என்று தற்புகழ்ச்சி - சொல்வர்
இப்புறம் வந்ததும் கோயிலிலும் நம்
இனத்தைச் செய்வார் இகழ்ச்சி. 24
மாடுண்பவன் திருக் கோயிலின் வாயிலில்
வருதற் கில்லை சாத்யம் - எனில்
ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
அவனே முதற் பாத்யம். 25
நீடிய பக்தியில் லாதவர் கோயில்
நெருங்குவ தால் தொல்லையே! - எனில்
கூடிஅக் கோயிலின் வேலை செய்வோருக்கும்
கூறும்பக்தி இல்லையே? 26
"சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற்
சுவாமியைப் பூசிப்பரோ?" - எனில்
நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
யாதுக்கு யோசிப்பிரே. 27
நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில்அக் கோயிலிலே - கண்டும்
ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
கோயிலின் வாயிலிலே. 28
கூறும் “உயர்ந்தவர்" "தாழ்ந்தவர்" என்பவர்
கோயிலின் செய்தி விட்டுப் - புலி
காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
காட்டுவிர் ஒன்று பட்டு. 29
வீறும் உயர்ந்தவர் கோயில் புகுந்ததில்
வெற்றி இந் நாட்டில் உண்டோ?- இனிக்
கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
தீதெனல் யாது கொண்டோ? 30
ஞாயமற்ற மறியல்
(நொண்டிச்சிந்து)
என்றுதான் சுகப்படுவதோ! - நம்மில்
யாவரும்
"சமானம்" என்ற பாவனை இல்லை - அந்தோ
ஒன்றுதான் இம் மானிடச்சாதி - இநில்
உயர்பிறப்
பிழிபிறப் பென்பதும் உண்டோ - நம்மில்
அன்றிருந்த பல தொழிலின் - பெயர்
அத்தனையும்
"சாதிகள்" என் றாக்கிவிட்டனர் - இன்று
கொன்றிடுதே "பேதம்" எனும் பேய்!
- மிகக்
கூகூம்இக்
கதை நினைக்கத் தேசமக்களே!
(என்று)
இத்தனை பெரும் புவியிலே - மிக
எண்ணற்றன
தேசங்கள் இருப்ப தறிவோம் - எனில்
அத்தனை தேசத்து மக்களும் - தாம்
அனைவரும்
“மாந்தர்” என்று நினைவதல்லால் - மண்ணில்
இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம்
எட்டுலக்ஷம்
சொல்லி மிகக் கெட்டலைவரோ! - இவர்
பித்து மிகக் கொண்டவர்கள்போல் - தம்
பிறப்பினில்
தாழ்வுயர்வு பேசுதல் நன்றோ?
(என்று)
தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத்
தேசத்தினில்
மாத்திரமே திரியக்கண்டோம் - எனில்
ஈண்டுப் பிற நாட்டில் இருப்போர் - செவிக்
கேறியதும்
இச்செயலைக் காறியு மிழ்வார் - பல்
ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம்
அறிவற்ற
மாக்கள்எனக் கருதப்பட்டோம் - நாம்
கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக்
கோணலுற்ற
செயலுக்கு நாணுவதில்லை - நாம்
(என்று)
ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த
நாற்றிசைக்கும்
ஞானப் புனல் ஊற்றிவந்தவர் - மிகு
மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த
மேதினியின்
மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று
வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில்
மக்களிடைத்
தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு
யானிவரைக் கேட்கப் புகுந்த - இவர்
இஞ்சிதின்ற
குரங்கென இனித்திடுவார் - நாம்
(என்று)
உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம்
ஊரை
அடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப்
பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள்
பேதமில்லை
என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம்
வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல
வாகனங்கள்
போகப்போருள் அனுபவிக்க - மிக
முயல்பவர் தம்மிற்சிலரை - மண்ணில்
முட்டித்
தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம்
(என்று)
உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான்
உயர்ந்தவன்
என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான்
கண்ட படி விலை உயர்த்தி - மக்கள்
காசினைப்
பறிப்பதற்குக் காரண முண்டோ? - சிறு
தொண்டு செய்யும் சாதிஎன்பதும், - நல்ல
துரைத்தனச்
சாதியென்று சொல்லிக்கொள்வதும், - இவை
பண்டிருந்த தில்லை எனினும் - இன்று
பகர்வது
தாங்கள் நலம் நுகர்வதற்கே - நாம்
(என்று)
வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த
மேதினியை
ஆளுபவன் க்ஷத்திரியனாம் - மிக
நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை
நியமித்த
வைசியனென் றுயர்வு செய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம்
அற்றிருந்தவன் சூத்திரன் என்றே - சொல்லி
ஆதியினில் மநுவகுத்தான் - இவை
அன்றியுமே
பஞ்சமர்கள் என்பதும் ஒன்றாம் - நாம்
(என்று)
அவனவன் செயும் தொழிலைக் - குறித்
தவனவன்
சாதியென மதுவகுத்தான் - இன்று
கவிழ்ந்தது மநுவின் எண்ணம் - இந்தக்
காலத்தினில்
நடைபெறும் கோலமும் கண்டோம் - மிகக்
குவிந்திடும் நால்வருணமும் - கீழ்க்
குப்புறக்
கவிழ்ந்த தென்று செப்பிடத்தகும் - இன்று
எவன் தொழில் எவன்செய்யினும் - அதை
ஏனென்பவன்
இங்கொருவ னேனுமில்லையே - நாம்
(என்று)
பஞ்சமர்கள் எனப்படுவோர் - மட்டும்
பாங்கடைவ
தால்நமக்குத் தீங்குவருமோ - இனித்
தஞ்சமர்த்தை வெளிப்படுத்தித் - தம்
தலைநிமிர்ந்
தாலது குற்றமென்பதோ - இது
வஞ்சத்தினும் வஞ்சமல்லவோ - பொது
வாழ்வினுக்கும்
இது மிகத் தாழ்மையல்லவோ - நம்
நெஞ்சத்தினில் ஈரமில்லையோ? - அன்றி
நேர்மையுடன்
வாழுமதிக் கூர்மையில்லையோ - நாம்
(என்று)
கோரும் "இமயாசல" முதல் - தெற்கில்
கொட்டுபுனல்
நற்"குமரி" மட்டும் இருப்போர் - இவர்
யாருமொரு சாதியெனவும் - இதில்
எள்ளளவும்
பேதமெனல் இல்லையெனவும் - நம்
பாரதநற் றேவிதனக்கே - நாம்
படைமக்கள்
எனவும் நம் மிடை இக்கணம் - அந்த
ஓருணர்ச்சி தோன்றியஉடன் - அந்த
ஒற்றுமை
அன்றோ நமக்கு வெற்றியளிக்கும்? - நாம்
(என்)
சேசு பொழிந்த தெள்ளமுது
மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி தோழி - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா - அவர்
காதினிக்கும்
படி சொன்னசொல் ஏதடி? தோழி
- அந்தக்
கர்த்தர் உரைத்தது
புத்தமு தென்றறி தோழா
- அந்தப்
பாதையில் நின்று
பயனடைந்தார் எவர்
தோழி - இந்தப்
பாரதநாட்டினர் நீங்கிய மற்றவர் தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள்
ஏற்கவில்லை உரை தோழி
- இங்கு
ஏசுவின் கட்டளை நாசம்புரிந்தனர் தோழா.
ஏசுமதத்தினில்
இந்துக்கள் ஏனடி? தோழி
- அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர் தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி தோழி - சட்டம்
நால் வருணத்தினில் நாலாயிரம்
சாதி தோழா - ஏசின்
ஆசை மதம்புகப் - பேதம்
அகன்றதோ? தோழி - அவர்க்
கங்குள்ள மூதேவி இங்கும்
முளைத்தனள் தோழா.
சொல்லிய சேசுவின் தொண்டர்கள் எங்கடி? தோழி - அந்தத
தொண்டர்கள் உள்ளனர், தொண்டு பறந்தது தோழா - அந்தப் புள்லிய பேதத்தைப் போக்கினரோ அவர்? தோழி அதைப்
போதாக் குறைக்குமுப்
போகம் விளைத்தனர் தோழா
- அடி
எல்லையில் பேதம் இழைத்ததுதான் எவர்? தோழி - அட
இந்த நெடுஞ்சட்டை அந்தகரே அறி தோழா - முன்பு
வல்லவர் சேசு வகுத்ததுதான் என்ன? தோழி
- புவி
'மக்கள எல்லாம் சமம்'
என்று முழங்கினர் தோழா.
ஈண்டுள்ள தொண்டர்கள்
என்ன செய்கின்றனர் தோழி
- அவர்
ஏழைகள் தாழ்வுறச் செல்வரை வாழ்த்தினர் தோழா - அடி
வேண்டவரும் திருக் கோயில்
வழக்கென்ன? தோழி
- அட
மேற்குலம் தாழ்குலம் என்று பிரித்தனர் தோழா
- விரல்
தீண்டப்படாதவர் என்பவர்
யாரடி? தோழி
- இங்குச்
சேசு மதத்தினைத் தாபித்த பேர்கள்என் தோழா
- உளம்
தூண்டும் அருட்சேசு சொல்லிய தென்னடி? தோழி - அவர்
சோதரர் யாவரும்' என்று
முழங்கினர் தோழா.
பஞ்சமர் பார்ப்பனர் என்பதெல்லாம் என்ன? தோழி - இவை
பாரதநாட்டுப் பழிச்சின்னத்தின்
பெயர் தோழா
- இங்குக்
கொஞ்சமும் இப்பழி கொள்ளுதல்
நல்லதோ? தோழி - ஒப்புக்
கொள்ளும் நிலத்தினில் கள்ளி
முளைத்திடும் தோழா - இங்கு
நெஞ்சினிற் சேசுவின்தொண்டர்
நினைப்பென்ன தோழி - தினம்
நேர்மையில் கோயில்வி
யாபாரம் செய்வது தோழா-இந்த
வஞ்சகர்க்கென்ன வழுத்தினர் சேசீ
நல் தோழி - இன்ப
வாழ்க்கையடைந்திட யார்க்கும் சுதந்தரம் என்றார்.
நாலு சுவர்க்கு நடுப்புறம் ஏதுண்டு? தோழி - அங்கு
நல்ல மரத்தினிற் பொம்மை
அமைத்தனர் தோழா - அந்த
ஆலயம் சாமி அமைத்தவர்
யாரடி? தோழி - மக்கள்
அறிவை இருட்டாக்கி ஆள
நினைப்பவர் தோழா - மக்கள்
மாலைத் தவிர்த்து வழி
செய்வரோ இனித் தோழி - செக்கு
மாடுகளாக்கித்தம் காலைச்சுற்றச்
செய்வர் தோழா
- அந்தக்
கோலநற் சேசு குறித்ததுதா
னென்ன? தோழி
- ஆகா
கோயிலென்றால் அன்பு தோய்மனம் என்றனர் தோழா.
ஆண்மைகொள் சேசு புவிக்குப் புரிந்ததென்? தோழி - அவர் அன்பெனும் நன்முர செங்கும் முழக்கினர் தோழா-அந்தக்
கேண்மைகொள் சேசுவின்கீர்த்தி
யுரைத்திடு தோழி
- அவர்
கீர்த்தியுரைத்திட வார்த்தை
கிடைக்கிலை தோழா
- நலம்
தாண்டவம் ஆடிடச் செய்தவரோ
அவர்? தோழி
– அன்று
தன்னைப் புவிக்குத்
தரும் பெருமானவர் தோழா
- அந்த
ஆண்டவன் தொண்டர்கள்
ஆகிடத்தக்கவர் யாவர்
- எனில்
'அன்னியர்' 'தான், என்ற
பேதமிலாதவர் தோழா.
(முற்றும்)
story of annadurai in tamil,arignar anna speech in tamil,annaduai story in tamil,news in tamil,tamil news,perarignar anna history in tamil,aringar anna speech in tamil,cn annadurai history in tamil,aransei interview,peralai interview,dmk former story in tamil,aringar anna,aazhi senthilnathan interview,tamil news today,perarignar anna in tamil,tamil,arignar anna in tamil,tamil actor rajesh interview,arignar anna speech in english free books,tamil books,tamilnadu school books pdf free download,tamil ebooks,tamil books pdf download,tamil books free download,free download tamil books pdf,tamil books pdf free download,tamil nadu text book free download,tamil spiritual books pdf free download,tamil books free download pdf format,how to get free books,tamil books pdf,tamil books pdf reader,books in tamil,tamil books to read,download cbse books pdf,read books for free, freetamilebooks, பாரதி தாசன்,பாரதிதாசன்,பாவேந்தர்பாரதி தாசன்பிறந்தநாள்#சிறு தொகுப்பு,இந்தி,கவிதைகள்,திணிப்பு,பாடல்கள்,பாவேந்தர்,எதிர்ப்பு,தியாகிகள்,bhatathidaasan
0 Comments: