கூலியுழைப்பும் மூலதனமும் - கார்ல் மார்க்ஸ்

புத்தகம்

கூலியுழைப்பும் மூலதனமும்

எழுத்து

கார்ல் மார்க்ஸ்

PDF

EPUB

MOBI

To Hear the Audio Book


தற்போது நடைபெறும் வர்க்கப் போராட்டங்களுக்கும் தேசியப் போராட்டங்களுக்கும் பொருளாயத அடிப்படை யாய் இருக்கும் பொருளாதார உறவுகளை நாம் எடுத் துரைக்கவில்லை என்பதாய்ப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் நம்மைப் பற்றி குறை கூறியுள்ளனர். வேண்டுமென்றேதான் நாம் இந்த உறவுகளை, நேரடியாய் இவை அரசியல் மோதல் களில் வலிய முன்னிலைக்கு வந்தபோது மட்டும், சுருக்க மாய்க் குறிப்பிட்டுக் காட்டி வந்திருக்கின்றோம்.

யாவற்றிலும் தலையாய விவகாரமாய் இருந்தது எது வெனில், நடப்பு வரலாற்றில் வர்க்கப் போராட்டத்தின் தடங்களை விவரித்துக் காட்டுவதுதான்; பிப்ரவரியின் விளை வாகவும் மார்ச்சின் விளைவாகவும் தொழிலாளி வர்க்கம் அடக்கிக் கீழ்ப்படுத்தப்பட்ட அதே நேரத்தில் அதன் எதி ராளிகளும் - அதாவது பிரான்சில் முதலாளித்துவக் குடியரசு வாதிகளும் ஐரோப்பா கண்டம் பூராவிலும் பிரபுத்துவ எதேச் சாதிகாரத்தை எதிர்த்துப் போராடிய முதலாளித்துவ, விவசாயி வர்க்கங்களும் - தோற்கடிக்கப்பட்டனர் என்பதை யும், பிரான்சில் "நேர்மையான குடியரசு" பெற்ற வெற்றி யானது பிப்ரவரிப் புரட்சியின் சங்கநாதத்தைக் கேட்டுச் சுதந்திரப் போர்கள் துவக்கிய தேசங்களுடைய வீழ்ச்சியை யும் அதேபோது குறித்தது என்பதையும், முடிவில் புரட்சி கரத் தொழிலாளர்களுடைய தோல்வியைத் தொடர்ந்து ஐரோப்பாவானது மீண்டும் அதன் பழைய இரட்டை அடிமை நிலையாகிய ஆங்கிலோ-ருஷ்ய அடிமை நிலைக்குச் சரிந்து விட்டது என்பதையும் நாம் ஏற்கனவே கைவசம் இருந்த வரலாற்று விவரப் பொருள்களைக் கொண்டும், மற்றும் அன்றாடம் புதிதாய் உருவாக்கப்படுகிறவற்றைக் கொண்டும் அனுபவவாத வழியில் நிரூபித்துக் காட்டுவது தான். பாரிசில் ஜூன் போராட்டம், வியன்னாவின் வீழ்ச்சி, 1848 நவம்பரில் பெர்லினது சோகக்கூத்து, போலந்தும் இத்தாலியும் ஹங்கேரியும் மேற்கொண்ட கடைசிக் கடும் பிரயத்தனங்கள், பட்டினி போடப் பட்டு ஐயர்லாந்து பணிய வைக்கப்பட்டது-இவைதாம் முதலாளித்துவ வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக் கும் நடைபெற்ற ஐரோப்பிய வர்க்கப் போராட்டத்தைக் குண நிர்ணயம் செய்து காட்டிய பிரதான காரணக் கூறுகள்; இவற்றைக் கொண்டுதான் நாம் புரட்சிக் கொந்தளிப்பு ஒவ்வொன்றும், எவ்வளவுதான் அதன் குறிக்கோள் வர்க்கப் போராட்டத்திலிருந்து தூர விலகி இருப்பதாய்த் தோன்றிய போதிலும், புரட்சிகரத் தொழிலாளி வர்க்கம் வெற்றிவாகை சூடாத வரை தோல்வியுறவே செய்யுமென்றும், சமூகச் சீர்திருத்தம் ஒவ்வொன்றும் பாட்டாளி வர்க்கப் புரட்சி யும் பிரபுத்துவ எதிர்ப்புரட்சியும் உலகப் போர் ஒன்றில் பலப் பரிட்சை நடத்தாத வரை பகற் கனவாகவே இருக்கு மென்றும் நிரூபித்துக் காட்டினோம். எதார்த்த உண்மையில் இருந்தது போலவே நம்முடைய விளக்கத்திலும் பெல்ஜிய மும் சுவிட்ஜர்லாந்தும் மாபெரும் வரலாற்றுப் படக் காட்சி யில் சோகமும் சிரிப்புமாய்க் கேலிச் சித்திரப் பாணியிலான படப் பிடிப்புகளாய் அமைந்தன. ஒன்று முதலாளித்துவ முடி வரசுக்கு முன்மாதிரி அரசாகவும், மற்றொன்று முதலாளித் துவக் குடியரசுக்கு முன்மாதிரி அரசாகவும் இருக்கும் இவை. ஐரோப்பியப் புரட்சியிலிருந்தும் அதே போல வர்க்கப் போராட்டத்திலிருந்தும் சுயேச்சையாய் இருந்து வரும் அரசுகளாய்த் தம்மைக் கற்பனை செய்து கொள்கின்றன. 


Categories:
Similar Books

0 Comments: