கருட புராணம் - Garuda Purana In Tamil

புத்தகம்

கருட புராணம்

எழுத்து

-

PDF

EPUB

MOBI

To Hear the Audio Book


1. அவா இன்மையே ஆனந்த வாழ்வு


திருமாலின் உந்தியில் பிரமதேவன் : தோன்றி. இவ்வுலகம் அனைத்தையும் படைத்தான். விசாலமான இந்த. உலகத்தில் தவம் புரிவதற்குச் சிறந்த இடமாகவும். ஆரணியங்களுக்கெல்லாம் அரசாகவும் விளங்குவது நைமிசாரணியம். அந்த வனத்தை நோக்கி, புராணங்களைச் சொல்லுவதில் வல்லவரான சூதமாமுனிவர் சென்று கொண்டிருந்தார். அந்த நைமிசாரணியத்தில் வேத வேதாங்கங்களை ஐயந்திரிப்ற கற்று உணர்ந்தவர்களும் ஸ்ரீ ஹரிகதா சங்கீர்த்தன சீலர்களுமான சவுனகர் முதலான முனிவர்கள் ஆசார சீலர்களாய், சொரூபுத்தியானம் செய்பவர்களாய் கூடியிருந்தார்கள். அவர்களைச் சேவிப்பதற்காகவே சூதமா முனிவர் வந்தார். அவரைக் கண்டதும் சௌனகாதி முனிவர்கள் உற்சாகமடைந்து அவரை எதிர்கொண்டு வரவேற்று நன்கு உபசரித்து, உயர்ந்ததொரு தூய்மையான ஆசனத்தில் அவரை அமரச்செய்து பூஜித்து வணங்கினார்கள்.


அதன் பிறகு அங்கிருந்த அருந்தவ முனிவர்கள் அனைவரும் சூதபுராணிகருக்கு அஞ்சலிசெய்து. "சூதமா முனிவரே! தங்களிடமிருந்து வைஷ்ணவ சைவ புராணங்களை நாங்கள். கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். பிரமனைக் குறித்த புராணங்களை இராஜஸகுணப் புராணங்களாகவும்,


சிவனைக்குறித்த புராணங்களைத் தாமஸ · புராணங்களாகவும் ஸ்ரீவிஷ்ணு புராணம் ஒன்றையே தத்துவங்களைச் சொல்லும் ஸத்துவ புராணமாகவும் நாங்கள் கருதியிருக்கிறோம். ஆகவே, விஷ்ணு சம்பந்தப்பட்ட உயர்ந்த ஒரு புராணத்தைத் தாங்கள் சொன்னால் அதை நாங்கள் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறோம். தாங்களோ. பகவானின் அம்சமாக விளங்கும் வேத வியாஸ முனிவரின் சீடர். அவர் தங்களுக்கு யாவற்றையும் ஓதி உணர்வித்திருக்கிறார். நீங்கள் அறியாதது ஓன்றுமில்லை. தர்மார்த்த காம மோட்சம் எனப்படும் அறம், பொருள். இன்பம், வீடு என்னும் நால்வகைப் புருஷார்த்தங்களையும் கொடுப்பதாகிய சாத்வீகமானதொரு புராணத்தை தேவரீர் கருணைகூர்ந்து எங்களுக்குச் சொல்ல வேண்டும். இதுவே எங்கள் வேண்டுகோளும் விருப்பமும் ஆகும். மாமுனிவரே! உலகில் உயிரினங்களுக்குப் பிறப்பும் இறப்பும் எந்தக் காரணத்தால் உண்டாகின்றன? ஜனனம் எடுத்து, பூமியிலே வாழ்ந்து வளர்ந்து அனுபவமடைந்து மரணம் அடைந்த பிறகு. எந்தச் செய்கையால் சுவர்க்கமும் நரகமும் அடைய நேரிடுகிறதெனக் கூறப்படுகிறது? எந்தக் காரணத்தால் தீராத நோய்கள் வருகின்றன? எப்போது பிரேத ஜன்மம், என்ற பூதப் பிரேத பைசாசாதி ஆவிப்பிறவிகள் தோன்றுகின்றன? எதனால் அத்தகைய ஜன்மம் நீங்கும்?. எதனால் முக்தி என்ற மோட்சம் கிடைக்கும்? இவற்றையெல்லாம். எங்களுக்குப் புரியும் வகையில் தாங்கள் தெளிவாகச் சொல்லவேண்டும்!" என்று மிகவும் விரும்பிப் பணிவோடு கேட்டார்கள். :



Similar Books

0 Comments: